• vilasalnews@gmail.com

தூத்துக்குடி அருகே ரூ.30 கோடி மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல் - 8பேர் கைது!

  • Share on

தூத்துக்குடி அருகே வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற 30 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருளை க்யூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம், வேம்பார் கடற்கரையில் தூத்துக்குடி கியூ பிரான்ச் பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜீவமணி வேல்ராஜ், வேலாயுதம், சுரேஷ்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கடற்கரையில் நின்று கொண்டிருந்த படகில் இருந்த 8பேர் கொண்ட கும்பலை சுற்றி வளைத்து போலீசார் சோதனை செய்ததில் அவர்களிடம் 2 கிலோ வீதம் 5 பாக்கெட்டுகளில் கிரிஸ்டல் மெத்தாம்பேட்டமைன் என்னும் போதைப் பொருளை வைத்திருப்பது தெரியவந்தது.  மேலும் அதனை அவர்கள் இலங்கைக்கு கடத்த முயன்றதாக கூறப்படுகிறது. 

இதுதொடர்பாக கீழவைப்பார் பரலோக மாதா கோவில் தெருவைச் சேர்ந்த பிரிட்டோ வாஸ் மகன் இருதய வாஸ் (43), அந்தோணி மகன் கிங் பேன் (25), பொம்மை மகன் சிலுவை (44), சிப்பிகுளம் ராஜ் மகன் அஸ்வின் (27), கீழகீழவைப்பார் ஆல்வின் மகன் வினிஸ்டன் (24), ஜெபமாலை மகன் சுபாஷ் (26), சிலுவை மகன் கபிலன் (21), சார்லி மகன் சைமோன் (எ) சுக்கு (30) ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  மேலும் அவர்களிடம் இருந்த ரூ.30கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

இதில் இருதய வாஸ் என்பவர் மீது பல்வேறு போதைப் பொருள் கடத்தல் வழக்குகள் இருப்பதாகவும், முதல் முறையாக இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள் பகுப்பாய்விற்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி அருகே 30 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பிடிபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Share on

தூத்துக்குடியில் திமுகவினர் மீது அதிமுகவினர் எஸ்பியிடம் புகார்!

தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் தபால் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியது!

  • Share on