• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் திமுகவினர் மீது அதிமுகவினர் எஸ்பியிடம் புகார்!

  • Share on

தூத்துக்குடியில் வாக்குப் பெட்டியை திமுக கைப்பற்ற முயன்றதாகவும் அதனை தடுக்க முயன்ற அதிமுகவினர் மீது திமுகவினர் தாக்குதல் நடத்த முயன்றதாக கூறி மாவட்ட எஸ்பியிடம் அதிமுகவினர் நேற்று புகார் அளித்தனர்.

தூத்துக்குடி மாநகராட்சி 26வது வார்டு வாக்குச் சாவடியில் நேற்று முன்தினம் வாக்குப்பதிவு முடிந்த நிலையில் 50க்கும் மேற்பட்ட திமுகவினர் ஆயுதங்களோடு சென்று வாக்குப்பெட்டியை கைப்பற்ற முயன்றனர். இதனை தடுக்க முயன்ற அதிமுகவினர் மீது ஆயுதங்களால் தாக்க முயன்றதாக கூறி,  திமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் நேற்று அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில், முன்னாள் நகர்மன்ற தலைவரும் அதிமுக நிர்வாகியுமான ஹென்றி, பிரபு மற்றும் கட்சி நிர்வாகிகள் ஒரு புகார் மனு ஒன்றை அளித்தனர்.

  • Share on

தூத்துக்குடியில் மேம்பாலத்தில் தடுமாறி விழுந்தவர் பலி!

தூத்துக்குடி அருகே ரூ.30 கோடி மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல் - 8பேர் கைது!

  • Share on