• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாநகராட்சி, 3 நகராட்சிகள், 17 பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் சதவீதம்

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி, கோவில்பட்டி, திருச்செந்தூர், காயல்பட்டினம் ஆகிய 3 நகராட்சிகள், 17 பேரூராட்சிகளில் உள்ள 396 வார்டு உறுப்பினர் பதவிக்கு நேற்று தேர்தல் நடந்தது. 

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் 3 லட்சத்து 14 ஆயிரத்து 887 ஆண்கள், 3 லட்சத்து 30 ஆயிரத்து 806 பெண்கள், 115 திருநங்கைகள் ஆக மொத்தம் 6 லட்சத்து 45 ஆயிரத்து 808 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 20 ஆயிரத்து 572 பேரும், பெண் வாக்காளர்கள் 21 ஆயிரத்து 516 பேரும், திருநங்கைகள் 21 பேரும் ஆக மொத்தம் 4 லட்சத்து 12 ஆயிரத்து 109 பேர் வாக்களித்து உள்ளனர். இது 63.81 சதவீதம் ஆகும்.

தூத்துக்குடி மாநகராட்சியில் 1 லட்சத்து 59 ஆயிரத்து 548 ஆண்கள், 1 லட்சத்து 66 ஆயிரத்து 836 பெண்கள், 70 திருநங்கைகள் ஆக மொத்தம் 3 லட்சத்து 26 ஆயிரத்து 454 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 95 ஆயிரத்து 674 பேர், பெண்கள் 97 ஆயிரத்து 284 பேர், திருநங்கைகள் 6 பேர் ஆக மொத்தம் 1 லட்சத்து 92 ஆயிரத்து 964 பேர் வாக்களித்து உள்ளனர். இது 59.11 சதவீதம் ஆகும்.

கோவில்பட்டி நகராட்சியில் 40 ஆயிரத்து 727 ஆண் வாக்காளர்கள், 42 ஆயிரத்து 342 பெண் வாக்காளர்கள், 18 திருநங்கைகள் ஆக மொத்தம் 83 ஆயிரத்து 87 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 23 ஆயிரத்து 109 பேரும், பெண்கள் 24 ஆயிரத்து 869 பேரும், திருநங்கைகள் 7 பேரும் ஆக மொத்தம் 47 ஆயிரத்து 985 பேர் வாக்களித்து உள்ளனர். இது 59 சதவீதம் ஆகும்.

திருச்செந்தூர் நகராட்சியில் 13 ஆயிரத்து 155 ஆண் வாக்காளர்கள், 13 ஆயிரத்து 963 பெண்கள், 8 திருநங்கைகள் ஆக மொத்தம் 27 ஆயிரத்து 126 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 9 ஆயிரத்து 894 பேரும், பெண்கள் 10 ஆயிரத்து 344 பேரும், திருநங்கைகள் 5 பேரும் ஆக மொத்தம் 20 ஆயிரத்து 243 பேர் வாக்களித்து உள்ளனர். இது 75 சதவீதம் ஆகும்.

காயல்பட்டினம் நகராட்சியில் 18 ஆயிரத்து 45 ஆண்கள், 18 ஆயிரத்து 668 பெண்கள், 3 திருநங்கைகள் ஆக மொத்தம் 36 ஆயிரத்து 716 பேர் உள்ளனர். இதில் ஆண்கள் 9 ஆயிரத்து 759 பேரும், பெண்கள் 12 ஆயிரத்து 763 பேரும், திருநங்கைகள் ஒருவரும் வாக்களித்து உள்ளனர். இது 61 சதவீதம் ஆகும்.

ஆழ்வார்திருநகரி பேரூராட்சியில் 72.59 சதவீதமும், ஆறுமுகநேரியில் 70.75 சதவீதமும், ஆத்தூரில் 73.73 சதவீதமும், ஏரலில் 77.16 சதவீதமும், எட்டயபுரத்தில் 82.21 சதவீதமும், கழுகுமலையில் 71.80 சதவீதமும், கானத்தில் 75.70 சதவீதமும், கயத்தாறில் 77.94 சதவீதமும், நாசரேத்தில் 66.51 சதவீதமும், பெருங்குளத்தில் 82.97 சதவீதமும், சாத்தான்குளத்தில் 73.81 சதவீதமும், சாயர்புரத்தில் 74.58 சதவீதமும், ஸ்ரீவைகுண்டத்தில் 71.45 சதவீதமும், தென்திருப்பேரையில் 79.92 சதவீதமும், உடன்குடியில் 68.99 சதவீதமும், புதூரில் 80.89 சதவீதமும், விளாத்திகுளத்தில் 73.75 சதவீதம் வாக்குகளும் பதிவாகி உள்ளன.

வாக்குப்பதிவு முடிந்ததும் அனைத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் வேட்பாளர்கள், அவர்களின் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் அந்தந்த வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்குள்ள பாதுகாப்பு அறைகளில், வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டன. வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. வாக்கு எண்ணிக்கை வருகிற 22-ந் தேதி நடக்கிறது.

  • Share on

தூத்துக்குடி : கோழிகளுக்கு கழிச்சல்நோய் தடுப்பூசி முகாம்

தூத்துக்குடியில் மேம்பாலத்தில் தடுமாறி விழுந்தவர் பலி!

  • Share on