• vilasalnews@gmail.com

தூத்துக்குடி : கோழிகளுக்கு கழிச்சல்நோய் தடுப்பூசி முகாம்

  • Share on

ஸ்ரீமூலக்கரையில் கோழிகளுக்கு கழிச்சல்நோய் தடுப்பூசி முகாம் நடந்தது.

வாகைக்குளம் அருகேயுள்ள பேட்மாநகரம் கால்நடை மருத்துவமனை சார்பில் ஸ்ரீமூலக்கரையில் கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு மருத்துவ முகாம் நடைபெற்றது.

இதுபோன்று, கருங்குளம் மருத்துவமனை சார்பில் தாதன்குளத்திலும், முடிவைத்தானேந்தல் கால்நடை மருத்துவமனை சார்பில் செவலூரிலும் கால்நடை மருத்துவ முகாம்கள் நடைபெற்றது.

முகாமிற்கு, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மருத்துவர் ராஜன் தலைமை வகித்தார். உதவி இயக்குநர் மருத்துவர் ஆண்டனி இக்னேஷியஸ் சுரேஷ் முன்னிலை வகித்தார். 

முகாமில், உதவி மருத்துவர்கள் காசிராஜன், செய்யது, தெய்வானை, வேல்மாணிக்கவல்லி தலைமையிலான மருத்துவக்குழுவினர் கோழிகளுக்கு கழிச்சல்நோய் தடுப்பூசி, பசுக்களுக்கு செயற்கைமுறை கருவூட்டல், ஆடு, மாடுகளுக்கு குடற்புழு நீக்கம் உள்ளிட்ட மருத்துவ சிகிச்சை அளித்தனர். 

ஸ்ரீமூலக்கரை முகாமில் பஞ்சாயத்து தலைவர் சாதிக்அலியும், தாதன்குளம் முகாமில் பஞ்சாயத்து தலைவர் சீதாலெட்சுமியும், செவலூர் முகாமில் பஞ்சாயத்து தலைவர் ராமக்கனி லெட்சுமணனும் சிறந்த கால்நடை வளர்ப்பாளர்களுக்கு பரிசு வழங்கினர்.

இதில், கால்நடை மருத்துவ உதவியாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது!

தூத்துக்குடி மாநகராட்சி, 3 நகராட்சிகள், 17 பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் சதவீதம்

  • Share on