தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று நடைபெற்று வந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு, மாலை 5 மணி ஆனதையடுத்து நிறைவு பெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, காலை ஏழு மணி முதல் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். முதியவர்கள் முதல், முதல்முறையாக வாக்களிக்கும் வாய்ப்பு பெற்ற இளைஞர்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலதரப்பு வாக்காளர்களும் தங்கள் வாக்குகளை பதிவிட்டு வந்தனர்.
இந்த நிலையில் மாலை 5 மணி ஆனதையடுத்து, வாக்கு பதிவு நிறைவடைந்தது. இதில் ஏற்கனவே 5 மணிக்கு முன்பாக வாக்கு பதிவு மையத்திற்கு வந்து வரிசையில் நின்று டோக்கன் பெற்றவர்கள் மட்டுமே மாலை 5 மணிக்கு பின்பு வாக்களிக்க முடியும்.
மேலும், 5 மணி முதல் 6 மணி வரை கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிட தக்கது.