தூத்துக்குடி மாநகராட்சி காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் 94 வயது மூதாட்டி ஒருவர் சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்கான நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிமுதல் தொடங்கி நடந்து வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்தே மக்கள் அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தூத்துக்குடி மாநகராட்சி 47 வது வார்டுக்கு உட்பட்ட தெற்கு காட்டன் ரோடு, காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில், 94 வயது மூதாட்டி ஒருவர் சக்கர நாற்காலியில் அமரவைத்து அழைத்துவரப்பட்டு வாக்களித்துச் சென்றார்.
பொறுப்புள்ள குடிமகனாக நாம் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக இந்த வயதிலும் ஜனநாயக கடமை ஆற்றியிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக இதைக்கண்ட பலரும் பாராட்டு தெரிவித்தனர்.