தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் வாக்குப்பதிவு மையங்களில் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது வருகிறது. வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வாக்குச் சாவடி மையங்களுக்குச் நேரில் சென்று பார்வையிட்டார்.
திரேஸ்புரம், கால்டுவெல் பள்ளி, புனித லசால் பள்ளி, காரப்பேட்டை பள்ளி, ஹோலி கிராஸ் பள்ளி, சிவந்தி ஆதித்தனார் பள்ளி, காமராஜர் கல்லூரி, அன்னம்மாள் கல்லூரி, லெவிஞ்சிபுரம் பள்ளி ஆகிய வாக்குச் சாவடி மையங்களை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் வாக்குப்பதிவு மையங்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் சென்று காவல்துறையினரின் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்து வருகிறார்.