தூத்துக்குடி மாநகராட்சி 59வது வார்டு அதிமுக வேட்பாளர் எஸ்பிஎஸ். ராஜா தூத்துக்குடி மில்லர்புரம் தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் வாக்குப்பதிவு செலுத்தினார்.
நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி 19 இன்று நடைபெற்றது. தூத்துக்குடி மாநகராட்சி 59வது வார்டு அதிமுக வேட்பாளர் வழக்கறிஞர் எஸ்பிஎஸ். ராஜா காலை 8:15 மணி அளவில் தனது வாக்கினை செலுத்துவதற்காக தூத்துக்குடி மாநகராட்சி வார்டு 33 மில்லர்புரம் தூய மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடிக்கு வருகை தந்து தனது வாக்கினை செலுத்தினார்.
இந்நிகழ்வின்போது, அதிமுக வேட்பாளர்கள் மில்லர்புரம் ராஜா, கணேசன், அதிமுக நிர்வாகிகள் சத்யா லட்சுமணன், சாம்ராஜ், சகாய ராஜா, தினகரன் உதயகுமார், சேர்ம ராஜா உள்ளிட்ட பலர் இருந்தனர்.