தூத்துக்குடி போல்பேட்டை கீதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் அமைச்சர் கீதாஜீவன் தனது குடும்பத்தோடு வந்து வரிசையில் நின்று நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தனது வாக்கினை செலுத்தினார்.
தூத்துக்குடி மாநகராட்சி உள்ளிட்ட 3 நகராட்சி 17 பேரூராட்சி வார்டுகளுக்கு இன்று ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான ஓட்டுப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கியது.
தூத்துக்குடி மாநகராட்சியில் 60 வார்டுகளுக்கான தேர்தலில் 443 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மாநகராட்சியில் மொத்தம் 319 ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடக்கிறது.
இந்த நிலையில், தூத்துக்குடி, போல்பேட்டை, கீதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள வாக்குச்சாவடியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன் மற்றும் அவரது கணவர், மகன், மருமகள், மகள், மருமகன் என தனது குடும்பத்தோடு வந்து, வரிசையில் நின்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தங்களது வாக்கை செலுத்தினார்கள்.