• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாநகராட்சி தேர்தல் - திமுக வேட்பாளர் ஜெகன் பெரியசாமி வாக்களித்தார்!

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சி 20வது திமுக வேட்பாளர் ஜெகன் பெரியசாமி நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தனது வாக்கினை செலுத்தினார்.

தூத்துக்குடி மாநகராட்சி உள்ளிட்ட 3 நகராட்சி 17 பேரூராட்சி வார்டுகளுக்கு  இன்று ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான ஓட்டுப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கியது.

தூத்துக்குடி மாநகராட்சியில் 60 வார்டுகளுக்கான தேர்தலில் 443 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மாநகராட்சியில் மொத்தம் 319 ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடக்கிறது.

இந்த நிலையில், தூத்துக்குடி, போல்பேட்டை, கீதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள வாக்குச்சாவடியில் 20வது வார்டு திமுக வேட்பாளர் ஜெகன் பெரியசாமி, நகர்ப்புற  உள்ளாட்சித் தேர்தலுக்கான தனது வாக்கை செலுத்தினார்.

தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் திமுக வேட்பாளர்கள் பெருமான்மையான இடங்களில் வெற்றிப்பெரும் பட்சத்தில், திமுக சார்பில் ஜெகன் பெரியசாமி  தூத்துக்குடி மாநகராட்சி மேயராகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • Share on

ஓட்டப்பிடாரம் : பஞ்சு ஏற்றி வந்த லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு!

தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் குடும்பத்தோடு வாக்களித்தார்!

  • Share on