• vilasalnews@gmail.com

120 அதிரடி விரைவுப்படை போலீசார் பாதுகாப்பு பணிக்கு வருகை - பாதுகாப்பு பணிகள் குறித்து எஸ்பி அறிவுரை!

  • Share on

நாளை நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு தமிழ்நாடு சிறப்பு காவல்படை அதிரடிப்படை வீரர்கள் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளனர். அவர்களுக்கு தேர்தல் பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அறிவுரை வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் கோவில்பட்டி, திருச்செந்தூர் மற்றும் காயல்பட்டினம் ஆகிய 3 நகராட்சிகள் மற்றும் 17 டவுன் பஞ்சாயத்துக்களில் வரும் 19.02.2022 அன்று வாக்குப்பதிவு  நடைபெற உள்ளது.

இத்தேர்தலுக்கான பாதுகாப்பு பணிகள் குறித்து இன்று (18.02.2022) மாவட்ட காவல் மைதானத்தில் வைத்து தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  அறிவுரைகள் வழங்கினார்.

இத்தேர்தல் பாதுகாப்பு பணிக்கு கூடுதலாக தூத்துக்குடி மாவட்டத்திற்கு மணிமுத்தூறு மற்றும் ராஜபாளையம் தமிழ்நாடு சிறப்பு காவல் படைகளைச் சேர்ந்த 120 அதிரடி விரைவுப்படை போலீசார் பாதுகாப்பு பணிக்கு வந்துள்ளனர்.

இவர்கள் ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் 10 சிறப்பு காவல் படை காவல்துறையினர் கோவில்பட்டி புதுக்கிராமம், கோவில்பட்டி காந்தி நகர், விளாத்திகுளம், தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மில்லர்புரம், உடன்குடி பஜார், ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி காமராஜ் கல்லூரி ஜங்ஷன், முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எம். சவேரியார்புரம் மற்றும் ஆறுமுகநேரி ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

மணிமுத்தாறு மற்றும் ராஜபாளையம் தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவல்துறையினர் 120 பேர் இன்று (18.02.2022) தூத்துக்குடி மாவட்ட மைதானத்தில் ஆஜராகி, அவர்களுக்கான பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து வாக்குப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு காவல்துறையினருக்கு தேர்தல் பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் என்னென்ன செய்ய வேண்டும் மற்றும் என்னென்ன செய்யக்கூடாது எனவும், தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள விதிமுறைகளை பின்பற்றி தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுமாறும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமார் அறிவுரைகள் வழங்கினார்.

இக்கூட்டத்தில் சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து, ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுடலைமுத்து, தென்பாகம் குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் ரேனியல் ஜேசுபாதம், மாவட்ட கட்டுபாட்டு அறை காவல் உதவி ஆய்வாளர் ரமேஷ்பாபு உள்ளிட்ட காவல்துறையினர் உடனிருந்தனர்.

தேர்தல் அமைதியான முறையில் பொதுமக்கள் அச்சமின்றி ஜனநாயக முறைப்படி வாக்களிக்க ஏதுவாக 3 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில், 13 காவல் துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில்  காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உட்பட 2500 போலீசார் மற்றும் 120 தமிழ்நாடு சிறப்புக் காவல் படை அதிரடிப் படை வீராகள் ஆகியோர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஆகவே வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை நேர்மையான முறையில் 100 சதவீதம் வாக்களிக்குமாறும், யாராவது வன்முறையில் ஈடுபட்டால் சட்டப்படி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  எச்சரித்துள்ளார்.

  • Share on

விளாத்திகுளம் : திமுக நிர்வாகிகள் காரில் வைத்து பரிசுப்பொருட்கள் பணம் விநியோகம் - காவல் நிலையம் முற்றுகையிட்டு போலீசாருடன் அதிமுக வாக்குவாதம்!

ஓட்டப்பிடாரம் : பஞ்சு ஏற்றி வந்த லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு!

  • Share on