தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் திமுகவினரிடமிருந்து பறிமுதல் செய்து போலீசாரிடம் ஒப்படைத்த பரிசுப்பொருட்கள் மாயமானதால் அதிமுகவினர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
விளாத்திகுளம் பேரூராட்சி 11வது வார்டு திமுக சார்பாக அய்யன்ராஜ் போட்டியிடுகிறார். இந்த நிலையில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக திமுக நிர்வாகிகள் காரில் வைத்து பரிசுப்பொருட்கள் பணம் விநியோகம் செய்வதாக அதிமுகவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. பின்னர் அங்கு போலீசாருடன் சென்று அதிமுகவினரின் பரிசு பொருட்கள் இருந்த காரை போலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
ஆனால் காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்ட காரில் இருந்த அனைத்து பொருட்களும் மாயமானதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிமுகவினர், விளாத்திகுளம் தேர்தல் பொறுப்பாளர் காந்தி காமாட்சி தலைமையில் விளாத்திகுளம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.