உங்கள் தொகுதியில் ஸ்டாலின் 8ஆயிரத்து 411 மனுக்களுக்கு தீர்வு கானப்பட்டுள்ளது எனவும், தூத்துக்குடி மாநகராட்சி 60 வார்டுகளிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும் எனவும் கனிமொழி எம்.பி பிரச்சாரம் மேற்கொண்டார்.
நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளில் வேட்பாளர்களை ஆதரித்து வடக்கு தெற்கு மாவட்டம் சார்பில் நடைபெற்ற கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், சமூகநலன் மற்றம் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் மீன் வளம் மற்றும் கால்நடைதுறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் முத்தம்மாள் காலணி மற்றும் அண்ணாநகர் பகுதியில் பிரச்சாரம் நடைபெற்றது.
தேர்தல் பிரச்சார நிறைவு நாள் கூட்டத்தில் கனிமொழி எம்.பி பேசுகையில்:
நீங்கள் தேர்ந்தெடுக்கும் உறுப்பினர்கள் அரசுக்கு பாலமாக இருந்து மக்கள் பணியாற்ற வேண்டும். அப்படிபட்ட உறுப்பினர்களை தேர்ந்தெடுத்தால் தான் உங்கள் பகுதியில் உள்ள குறைகளை தீர்த்து வைக்க முடியும்.
முத்தம்மாள் காலணி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி அதிகாரிகளை விரைவாக பணி செய்ய உத்திரவிட்டதின் காரணமாக விரைவாக தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
இனி வரும் மழைகாலங்களில் அதுபோல் பாதிப்பு ஏற்படக்கூடாது. என்று முதலமைச்சர் எங்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற புகாரில் பெறப்பட்ட மனுக்களில் 8411 மனுக்களுக்கு தீர்வு கானப்பட்டுள்ளது 4200 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. 6653 பேருக்கு கூட்டுப்பட்டா வழங்கப்பட்டுள்ளது.
இப்படி பல்வேறு சாதனைகள் நிகழ்த்தியுள்ள மாவட்டத்தில் விரைவில் 4500 கோடி மதிப்பீல் உலகதரம் வாய்ந்த பர்னிச்சர் பார்க் அமைக்கப்படவுள்ளது. தகவல் தொழில்நுட்ப பூங்காவும் தொடங்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெறவுள்ளது. முதலமைச்சர் தொடங்கி வைக்க வரவுள்ளார். கொரோனா காலக்கட்டத்தில் அரசு மருத்துவமணையில் எம்.பி நிதியிலிருந்து அமைக்கப்பட்ட சில பணிகளை கடந்த கால அதிமுக ஆட்சியில் இழுத்தபடிப்பு செய்யப்பட்டு திமுக ஆட்சி அமைந்ததும் அத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதே போல் பல பணிகளை தடுத்ததும் மக்களுக்கான பணிகளை செய்யாமல் ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் பல்வேறு முறைகேடுகளும் நடைபெற்றன. இதற்கெல்லாம் முற்றுப்புள்ள வைக்கப்பட்டு முழுமையான வளர்ச்சி மாநகராட்சி பகுதியில் நடைபெறவேண்டும். அதற்கு ஒட்டு மொத்தமாக அனைவரும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் சின்னமான உதயசூரியன், கை, கதிர்அருவாள், அரிவாள் சுத்தியல் நட்சத்திரம், மற்றும் ஏணி சின்னத்திற்கு வாக்களித்து வெற்ற பெற செய்ய வேண்டும் என கேட்டு கொண்டார்.
பிரச்சாரத்தில், ஒட்டப்பிடார சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, காங்கிரஸ் மாநில துணைதலைவர் சண்முகம், திமுக பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநில மாணவரணி துணைச்செயலாளர் உமரிசங்கர், வடக்கு மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், பொருளாளர் ரவீந்திரன், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மதிமுக மாவட்ட செயலாளர் ரமேஷ், சிபிஎம். மாவட்ட செயலாளர் ஆறுமுகம், சிபிஐ மாநகர செயலாளர் ஞானசேகர், இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் மாநகர தலைவர் முபாரக், காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன், ஐஎன்டியுசி தலைவர் ராஜு, சேவா தள தலைவர் ராஜா, மாவட்ட செயலாளர் கோபால், மண்டல தலைவர் ஐசன்சில்வா, மதிமுக மாநகர செயலாளர் முருகபூபதி, சிபிஎம்.செயலாளர் ராஜா, ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் முத்து, வடக்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் மதியழகன், மீனவரணி செயலாளர் அந்தோணிஸ்டாலின், துணைச்செயலாளர் ஜேசையா, பொறியாளர் அணி செயலாளர் அன்பழகன், தொண்டரணி செயலாளர் ரமேஷ், ஆதிதிராவிட நல அணி செயலாளர் பரமசிவம், சுற்றுசூழல் அணி செயலாளர் ஜெபசிங், மாணவரணி துணைச்செயலாளர்கள் வக்கீல் பாலகுருசாமி, சீனிவாசன், அரசு வக்கீல்கள் மோகன் தாஸ் சாமுவேல், சுபேந்திரன், மாலா தேவி, இலக்கிய அணி துணைச்செயலாளர் நலம் ராஜேந்திரன், மகளிர் அணி செயலாளர் கஸ்தூரி தங்கம், பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன், மேகநாதன், நிர்மல்ராஜ், ஜெயக்குமார், ரவீந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் இசக்கிராஜா, சக்திவேல், கதிரேசன், மாநகர மருத்துவ அணி செயலாளர் அருண்குமார், மாநகர இளைஞர் அணி துணைச்செயலாளர் செல்வின், மீனவரணி துணைச்செயலாளர் ஆர்தர்மச்சாது, பகுதி இளைஞர் அணி செயலாளர் சூர்யா, ரவி, வட்ட செயலாளர்கள் பொன்ராஜ், சாரதி, சிங்கராஜ், நாராயணன், தெய்வேந்திரன், வக்கீல் சதீஷ்குமார், சுரேஷ், மைக்கேல், நவநீதன், முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயசிங், செந்தில்குமார், கருணா, அல்பட், லிங்கராஜா, பிரபாகர்,
தெற்கு மாவட்ட ஆதிதிராவிட நல அணி செயலாளர் டிடிசி ராஜேந்திரன், சுற்றுசூழல் அணி செயலாளர் ரவி என்ற பொனபாண்டி, மாவட்ட இளைஞர் அணி துணைச்செயலாளர் அம்பாசங்கர், மாவட்ட வர்த்தக அணி துணைச்செயலாளர் ரெங்கசாமி, மாணவரணி துணைச்செயலாளர் மாரிச்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ டேவிட் செல்வின், மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார், மற்றும் ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்கொடி, சுப்பிரமணியன், பகுதி செயலாளர் சிவக்குமார், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, மற்றும் ஜாகீர் உசேன், ஜான்ராஜ், ராஜசேகர், வெங்கடேஷன், மாயக்கண்ணன், பாலசுப்பிரமணியன், சங்கரசுப்பிரமணியன், அருணாதேவி, மீனா, பியூலா, செல்வக்குமார், பரமசிவன், ராஜகுமாரசாமி, செல்வராஜ், சேவியர், பால்ராஜ், கண்ணன், காளிமுத்து, ராஜாமணி, அதிசயராஜ், ராஜம், மகேந்திரன், சண்முகராஜ், பொன்ராஜ், சிவன், வெற்றி, துரைராஜ், தெய்வேந்திரன், சுரேஷ், ஷாஜகான், சிவகாமி, சுந்தரி, மரிய சேவியர், அபிராமி, செல்லையா, ஜோதிடர் முருகன் தர்மராஜ், ஒன்றிய கவுன்சிலர் நவநீத கிருஷ்ணன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.