• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாநகரம் வளர்ச்சி கண்டிட புதிய தமிழகம் கட்சி வேட்பாளர்களை வெற்றிபெற செய்திடுங்கள் - மாவட்ட செயலாளர் கனகராஜ் பிரச்சாரம்!

  • Share on

தூத்துக்குடி மாநகரம் வளர்ச்சி கண்டிட புதிய தமிழகம் கட்சி வேட்பாளர்களை வெற்றிபெற செய்திடுங்கள் என தூத்துக்குடி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கனகராஜ்  வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தூத்துக்குடி மாவட்டத்தில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தூத்துக்குடி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கனகராஜ் மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்.

இதன்படி, தூத்துக்குடி மாநகராட்சி 2வது வார்டில் போட்டியிடும் மகேஸ்வரி, 56வது வார்டில் போட்டியிடும் விஜயராஜ், 60வது வார்டில் போட்டியிடும் ரமேஷ் ஆகியோரை ஆதரித்து தூத்துக்குடி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பி.கனகராஜ் வார்டுகளுக்குரிய முத்தம்மாள் காலனி, கேம்ப்1, கேம்ப் 2, அனல்மின் நிலைய குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து துண்டுபிரசுரங்களை கொடுத்து வாக்கு சேகரித்தார்.

அப்போது தூத்துக்குடி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கனகராஜ் பேசியதாவது:

நமது நிறுவன தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது தூத்துக்குடி மாவட்டத்திற்கு பல்வேறு நல்லபல திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.

இந்தவகையில் தற்போதைய உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் நமது வேட்பாளர்கள் தங்கள் பகுதியில் வாழ்ந்துவரும் அனைத்து சமூக மக்களும் நலன்பெறவும், அவர்களுக்கான அரசின் திட்டங்களை சரியான முறையில் செயல்படுத்திடவும், மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்திடவும் வாக்காளர்களான நீங்கள் எங்கள் ªவேட்பாளர்களுக்கு தென்னைமரம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்திடுங்கள்.

தூத்துக்குடி மாநகராட்சியில் போட்டியிடும் நமது கட்சி வேட்பாளர்கள் மூவரும் வெற்றி பெறும் பட்சத்தில் அதன்மூலமாக தூத்துக்குடி மாநகரின் வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்திட மாநகராட்சி நிர்வாகத்திற்கு தொடர்ந்து குரல் கொடுக்கப்படும். 

மாநகரில் மக்களுக்கான அடிப்படை திட்டங்கள் நடைபெற்று மாநகரம் வளர்ச்சி கண்டிட அனைத்து மக்களும் எங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு தென்னை மரம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்திடவேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது, வேட்பாளர்கள் விஜயராஜ், ரமேஷ், மகேஸ்வரி, மாநகர இளைஞரணி செயலாளர் மாரியப்பன், தேவேந்திரகுல வேளாளர் டி.என்.இ.பி. தொழிற்சங்க பாலகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர்கள் மனோகரன்(கிழக்கு), ஜேசிபி முருகன்(மேற்கு), விளாத்திக்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் குளத்தூர் பெருமாள், வழக்கறிஞர் அணி துணை செயலாளர் சங்கரசுப்பு மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உடன் சென்றனர்.

  • Share on

ஏரல் : கொலை முயற்சியில் ஈடுபட்ட பிரபல ரவுடி கைது

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் 8ஆயிரத்து 411 மனுக்களுக்கு தீர்வு கானப்பட்டுள்ளது - கனிமொழி எம்.பி பிரச்சாரம்!

  • Share on