ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரிவாளால் தாக்க முயன்று கொலை முயற்சியில் ஈடுபட்ட பிரபல ரவுடி போலீசார் கைது செய்தனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவுபடி ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் மேற்பார்வையில் ஏரல் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) அன்னராஜ் தலைமையிலான போலீசார் நேற்று (16.02.2022) ரோந்து பணியில் ஈடுபட்ட போது ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்தாரம்மன் கோவில் வணிக வளாகம் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த குரும்பூர், ராஜபதி, ரூபன் மகன் முத்துகுமார் (28)என்பவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரிடம் தகராறு செய்து, அரிவாளால் தாக்க முயன்று கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. உடனே மேற்படி போலீசார் முத்துகுமாரை கைது செய்தனர்.
இதுகுறித்து ஏரல் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி கைது செய்யப்பட்ட முத்துகுமார் மீது ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்தில் கொலை முயற்சி, திருட்டு வழக்குகள் உட்பட 6 வழக்குகளும், ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும் என மொத்தம் 7 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.