தூத்துக்குடி 35வது வார்டு அதிமுக வேட்பாளர் வீரபாகு வீதிவீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி அதிமுக வேட்பாளராக 35வது வார்டில் முன்னாள் கவுன்சிலர் வக்கீல் வீரபாகு போட்டியிடுகிறார். வார்டுக்குட்பட்ட பகுதி மக்களுக்கு பல வாக்குறுதிகளை அளித்து வாக்கு சேகரித்து வருகிறார்.
பொதுமக்களுக்கு தேவையான சாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், முதியோர் உதவித்தொகை, திருமண உதவித்தொகை, புதிய ரேசன் கார்டு, பெயர் சேர்த்தல், நீக்கல் என பல்வேறு பொது பணிகளை பகுதி மக்களுக்காக செய்து கொண்டு வருவதாகவும்
கோவில் திருவிழா, ஆலய விழா, மசூதி விழா என அனைத்து தரப்பினரும் நடத்தும் நிகழ்ச்சிகளில் ஜாதி, மத பேதமின்றி முடிந்தவரை அனைத்து உதவிகளையும் செய்து அதில் கலந்து கொண்டு மனிதநேயத்தை வளர்த்து மக்களோடு மக்களாக வாழ்ந்து
வார்டுக்குட்பட்ட பகுதிகளில் குடித்தண்ணீர், சாலை வசதி, கால்வாய் வசதி, மின்விளக்கு போன்ற குறைபாடுகளை நீக்கி வருவதாகவும்
கூறி இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து தன்னை வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டு தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்