தூத்துக்குடி 42வது வார்டு திமுக வேட்பாளர் அன்னலெட்சுமி உதயசூரியன் சின்னத்திற்கு வீதிவீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.
நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. திமுக வேட்பாளராக 42வது வார்டில் முன்னாள் கவுன்சிலர் அன்னலெட்சுமி போட்டியிடுகிறார்.
என்னை உதயசூரியன் சின்னத்தில் தேர்ந்தெடுத்து வெற்றி பெற செய்தால் தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள வார்டுகளில் முதன்மை வார்டாக மாற்றுவேன்.
உங்களுக்கு பணி செய்வதற்கு ஊழியனாக களத்தில் போட்டியிடுகிறேன். தேர்தல் நேரத்தில் மற்றவர்கள் கொடுக்கும் வாக்குறுதிகள் மறைந்து போகும். நான் சொல்லும் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். கொரோனா காலக்கட்டத்தில் பகுதி மக்களுக்கு செய்த உதவிகளையும், நன்மைகளையும் எண்ணிப்பார்த்து எளியவனாகிய எனக்கு இனிமையாக பழகும் உங்கள் வீட்டு வேலைக்காரனாக பணியாற்றுவதற்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். உங்களுக்காக உழைப்பேன். உண்மையாக இருப்பேன் என்று அனைத்து பகுதிகளிலும் வாக்கு சேகரித்து வரும் அன்னலெட்சுமி வாக்காளரிடம் வாக்குறுதி அளித்து ஓட்டு கேட்டு வருகிறார்.