தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பூபாலராயர்புரம் 10 தெருக்களிலும் சுயேட்சை வேட்பாளர் நூர்ஜஹான் சேக்முகமது வீடு வீடாக சென்று வாக்குகள் சேகரித்தார். செல்லும் இடத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் வரவேற்பு கொடுத்தனர்.
சுயேட்சை வேட்பாளர் நூர்ஜஹான் சேக்முகமது 15 கோரிக்கைகளை முன் மொழிந்து பொதுமக்களிடையே வாக்குறுதியாக கொடுத்தார்.
இதில் பூபாலராயர்புரம் மீன் மார்க்கெட் புதுப்பிக்கப்படும் என்றும் , குரூஸ்புரம் மற்றும் லூர்த்தம்மாள்புரத்தில் செயல்பட்டு வருகின்ற ஆரம்ப சுகாதார நிலையம் பொதுமக்களின் தேவைக்கேற்ப மருத்துவ ரீதியாக தரம் உயர்த்தப்படும் என்றும் , மீன் மார்க்கெட் பகுதியில் சுமார் 50 ஆண்டு காலமாக குடி இருந்து வருகின்ற குடியிருப்புகளுக்கு அரசு பட்டா கிடைத்திட வழி வகை செய்யப்படும் என்றும் , 10 ஆண்டு காலமாக பராமரிக்கபடாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள அனைத்து சாலைகளும் புதுப்பித்து புதிய தார் சாலை அமைத்து தரப்படும் என்றும், ஹார்விரம் புரம் பகுதி மக்களின் அடிப்படை தேவைகளில் முக்கியத்துவமான சாலை வசதி மற்றும் கால்வாய் வசதிகளை பெற்று தரப்படும் என்றும் , வணிக பெருமக்கள் மற்றும் பொதுமக்களின் உயிரையும் உடமைகளையும் பாதுகாக்க வார்டு முழுவதிலும் சி.சி. டிவி கேமரா பொறுத்தப்பட்டு அது காவல்நிலைய கண்காணிப்பில் கவனிக்க வழி வகை செய்யப்படும் என்றும் , 60வார்டிலும் தூய்மை நிறைந்த வார்டாக 09வது வார்டை மாற்றியமைக்க வழி வகை செய்யப்படும் என ஓர் 15 செயல்திட்டங்களை வாக்குறுதியாகவே பொதுமக்களிடம் சொல்லி வாக்கு சேகரித்தனர்.