தூத்துக்குடி 60வது வார்டு பகுதியை முன்மாதிரி வார்டாக மாற்றுவேன் என தி.மு.க வேட்பாளர் வக்கீல் பாலகுருசாமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 60வது வார்டு பகுதியான அனல்மின் நகர், துறைமுகம் குடியிருப்பு, சுனாமி குடியிருப்பு, கோயில்பிள்ளை நகர், துறைமுகம் நெடுஞ்சாலை ஆகிய பகுதிகள் அடங்கிய வார்டில் அனைத்து தரப்பினரும் குடியிருந்து வருகின்றனர்.
60 வார்டுகளில் உள்ள பகுதியில் கட்டமைப்பை விட தனது வார்டு பகுதி மக்களின் நலன் காக்கும் வகையில் எந்த பணியாக இருந்தாலும், எப்பொழுதும் என்னை தொடர்பு கொள்ளலாம்.
பகுதி மக்களுக்காக முழுமையாக உழைப்பதற்கு அனைத்து தரப்பினரின் குறைகளை தீர்ப்பதற்கும் உங்கள் வீட்டு பிள்ளையாக நான் போட்டியிடுகிறேன். எனக்கு அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று கேட்டுக் கொள்வது மட்டுமின்றி தி.மு.க கூட்டணி கட்சியினருடன் இணைந்து தனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்து வருகிறார்.