தூத்துக்குடி அதிமுக வேட்பாளர் ராஜாவை ஆதரித்து முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் வாக்கு சேகரித்தார்.
நடைபெறவுள்ள உள்ளாட்சி மன்ற தேர்தலில் 33வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராஜாவை ஆதரித்து மில்லர்புரம் சின்னமனிநகர் சிலோன்காலணி, உள்ளிட்ட பல பகுதிகளில் வீடு வீடாக சென்று முன்னாள் அமைச்சரும், அதிமுக மாநில அமைப்பு செயலாளருமான சி.த.செல்லப்பாண்டின் வாக்கு சேகரித்தார்.
பிரச்சாரத்தில் தலைமை பேச்சாளர் கருணாநிதி, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், மீனவரணி இணைச்செயலாளர் துரைபாண்டியன், மாவட்ட மகளிர் அணி இணைச்செயலாளர் ஞானபுஷ்பம், ஜெ பேரவை மூர்த்தி, சிறுபான்மைபிரிவு பிரபாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.