• vilasalnews@gmail.com
Vrushav Infotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

தூத்துக்குடி உள்ளாட்சி தேர்தலை 5 ஆண்டுகாலமாக நடத்தாத அதிமுகவிற்கு பாடம் புகட்ட வேண்டும்-அமைச்சர் கீதாஜீவன் பேச்சு!

  • Share on

தூத்துக்குடி உள்ளாட்சி தேர்தலை 5 ஆண்டுகாலமாக நடத்தாத அதிமுகவிற்கு பாடம் புகட்ட வேண்டும் என அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.

நடைபெறவுள்ள உள்ளாட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ வேட்பாளர் பெனில்டஸ் திமுக வேட்பாளர்கள் சரவணக்குமார், விஜயலட்சுமி, ரூபவள்ளி, பேபி ஏஞ்சலின், ஜெனிட்டா, ஆகியோரை ஆதரித்து பல்வேறு பகுதிகளில் அமைச்சர் கீதாஜீவன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில், 5 ஆண்டுகலமாக உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் இருந்துவிட்டு இப்போது எந்த முகத்தை வைத்து கொண்டு அதிமுகவினர் ஓட்டுக்கேட்கிறார்கள் என்று புரியவில்லை.

வரும் மாதத்தில் பல்வேறு எழுத்து தேர்வுகள் நடைபெறுகின்றன. அதன் மூலம் தமிழகத்தில் காலியாகவுள்ள பணியிடங்கள் முழுமையாக நிரப்பபடவுள்ளது. அதுவும் அனைத்து வேலை வாய்ப்புகளும் தமிழர்களுக்கு தான் என்று சட்டமே நிறைவேற்றியுள்ளார்.

அதிமுகவும், பிஜேபியும் இரட்டை வேடம் போடுகின்றனர். மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். கடந்த காலங்களில் நான் அமைச்சராக இருந்த போது மாநகரில் பல்வேறு பகுதிகளில் செய்த பணிகளை தவிர வேறு எந்த பணியும் 10ஆண்டுகளாக நடைபெறவில்லை.

மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டு பகுதிகளிலும் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும். மாநகராட்சி முழுவதும் முழுமையாக வளாச்சியடைய முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெறவேண்டும்.

அதற்கு வாக்காளர்கள் உதயசூரியன், கை அரிவாள், சுத்தியல் நட்சத்திரம், கதிர்அருவாள் ஆகிய சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெற செய்து முதலமைச்சரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

பிரச்சாரத்தில், மாநில காங்கிரஸ் துணைத்தலைவர் சண்முகம், திமுக பொதுக்குழு உறுப்பினரும் வேட்பாளருமான ஜெகன் பெரியசாமி, மதிமுக மாநில மீனவரணி செயலாளர் நக்கீரன், திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மதிமுக மாநகர செயலாளர் முருகபூபதி, மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன், திமுக தொண்டரணி செயலாளர் ரமேஷ், இளைஞர் அணி செயலாளர் மதியழகன், ஆதிதிராவிட நல அணி செயலாளர் பரமசிவம், சுற்றுச்சூழல் அணி செயலாளர் ஜெபசிங், காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் முத்துவிஜயா, சிபிஐ மாநகர துணைச்செயலாளர் மாடசாமி, மாநகர திமுக வழக்கறிஞர் அணி துணைச்செயலாளர் ரூபஸ், திமுக மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், பொருளாளர் ரவீந்திரன், மாணவரணி துணைச்செயலாளர் வக்கீல் சீனிவாசன், வட்டச்செயலாளர்கள் மைக்கேல், சுரேஷ், பொன்ராஜ், ஏசுவடியான், வட்டப்பிரதிநிதிகள் துரை, வேல்சாமி, மகேஸ்வரசிங், முன்னாள் கவுன்சிலர்கள் சங்கர், செல்வராஜ், ஜெயசிங், உள்பட கூட்டணி கட்சியை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

பிரச்சாரத்தின் போது போல்டன்புரத்திலுள்ள முன்னாள் அமைச்சர் கக்கன்சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை செய்து வணங்கினார்.

  • Share on
VrushaInfotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

தூத்துக்குடி அதிமுக வேட்பாளர் லில்லிமலரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் பிரச்சாரம்!

நாளை மறுநாள் வாக்குப்பதிவு - வன்முறையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை - எஸ்பி ஜெயக்குமார் எச்சரிக்கை!

  • Share on