தூத்துக்குடி 32வது வார்டு திமுக வேட்பாளர் கந்தசாமி வீதி வீதியாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டார்!
நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் 32வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கந்தசாமி வார்டுக்குட்பட்ட டிஎம்பி காலணி, அண்ணாநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் பொதுமக்களிடம் திமுக ஆட்சியின் சாதனைகளையும் அமைச்சர் கீதாஜீவன் செய்த பணிகளையும் எடுத்துக்கூறி மழைகாலங்களில் ஏற்பட்ட பாதிப்பின் போது செய்த வேலைகளையும் எடுத்து கூறினார்.
தமிழக அரசின் அனைத்து திட்டங்களும் இப்பகுதிக்கு முழுமையாக கிடைப்பதற்கு என்னாலும் உழைப்பதாகவும், மாநகராட்சி நிர்வாகம் நல்ல முறையில் நடைபெற்று அனைத்து பகுதிகளுக்கும் சாலை வசதி, கால்வாய் வசதி, மின்விளக்கு வசதி என அனைத்து அடிப்படை பணிகளையும் செய்து கொடுப்பதாகவும், அரசின் சார்பில் திருமண உதவி முதியோர் உதவி என அனைத்து திட்டங்களையும் கொண்டு சேர்ப்பதாகவும், மக்களிடையே வாக்கு சேகரித்தார்.
அப்பகுதி மக்கள் ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்றனர்.
பிரச்சாரத்தின் போது, மாவட்ட மகளிர் அணி செயலாளர் கஸ்தூரிதங்கம், மாநகர மாணவரணி துணைச்செயலாளர் பால்மாரி, தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் அருணாதேவி, மகளிர் தொண்டரணி பார்வதி, போல்பேட்டை பகுதி துணைசெயலாளர் ரேவதி, மகளிர் அணி கவிதா, சுகிர்தா, ஜெயராணி, அண்ணாநகர் பகுதி இளைஞர் அணி துணைச்செயலாளர் ராமசந்திரன், வார்டு நிர்வாகிகள் தாமஸ், ஆல்வின், இளங்கோ, தளவாய்சாமி, எட்வர்ட், ராஜா, மருத்துவ அணி துணைச்செயலாளர் மாரிமுத்து, சேகர், ஜான்சன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.