தூத்துக்குடி மாநகராட்சி 20வது வார்டு திமுக வேட்பாளர் ஜெகன் பெரியசாமியை ஆதரித்து அமைச்சர் கீதாஜீவன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தூத்துக்குடி மாநகராட்சி 20வது வார்டில் திமுகக வேட்பாளராக போட்டியிடும் ஜெகன் பெரியசாமியை ஆதரித்து, வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பிரச்சாரம் மேற்கொண்டார்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில்:
இப்பகுதி முழுவதும் சிசிடிவி கேமரா பொருத்தப்படும். ஓவ்வொரு தெருக்களிலும் புகார் பெட்டி வைக்கப்படும். அனைத்து சாலைகளும் சீரமைக்கப்படும். எதிர்த்து நிற்கும் வேட்பாளர் டெபாசிட் இழக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக மக்களின் குறைகளை தீர்க்காத அதிமுக அரசுக்கு மிக்சரியான பாடம் புகட்ட வேண்டும். பகுதியில் உள்ள அனைத்து குறைகளையும் தீர்ப்பதற்கும் அரசின் திட்டங்கள் முறையாக உங்களுக்கு கிடைத்திடவும் தம்பி ஜெகனை தேர்ந்தெடுக்க வேண்டும்.
நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு எப்போதும் வரக்கூடியவர், எல்லா நன்மைகளையும் உங்களுக்கு கிடைப்பதற்கு முழுமையாக அவர் அற்பணித்து கொண்டு பணியாற்றுவார். முதலமைச்சரின் அனைத்து திட்டங்களையும் இந்த பகுதிக்கு பெற்ற தர உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றார்.
பிரச்சாரத்தில் காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் சண்முகம், மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன், ஐஎன்டிசியு தலைவர் ராஜீ, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் ஜெயக்குமார், முன்னாள் கவுன்சிலர்கள் ரவீந்திரன், முத்துச்செல்வம், கிங்ஸ்டன், தங்கம்மாள், ராஜாமணி, லெட்சுமணன், ராஜ், வட்டச்செயலாளர்கள் நாராயணன், முனியசாமி, கீதாமாரியப்பன், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகரன், லிங்கராஜா, சமூக ஆர்வலர் ஐசக், நிர்வாகிகள் அற்புதராஜ், அருணகிரி, ராஜா, கடற்கரை, கனகசுந்தர், குமார், கீதா செல்வமாரியப்பன், ராம்குமார், சண்முகசுந்தரம், ஜேஸ்பர், ஞானமார்ட்டின், பாஸ்கர், கணேஷ், ராஜா, பெரியசாமி, கதிரேசன், செல்லப்பாண்டி, மின்வாரிய தொழிற்சங்க செயலாளர் பேச்சிமுத்து, அவைத்தலைவர் செந்தூர்பாண்டி, குமார், ஸ்டாலின் சமூக வலைதள அணி செயலாளர் நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.