தூத்துக்குடி 35வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் பெனில்டஸ் வீடு வீடாக சென்று மக்களிடையே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் 35வது வார்டு காங்கிரஸ் வேட்பாளராக பெனில்டஸ் போட்டியிடுகிறார்.
சிதம்பரநகர் கிழக்கு, மேற்கு, தெற்கு, பிரையண்ட்நகர், அம்மன்கோவில் தெரு, கணேஷ்நகர், பத்திநாதபுரம், ஜெயலாணி காலணி, கணேஷ்நகர், சங்கர் காலணி உள்ளிட்ட பகுதிகளில் திமுக ஆட்சியின் சாதனைகளையும் அமைச்சர் கீதாஜீவன் செய்த பணிகளையும் எடுத்துக்கூறி மழைகாலங்களில் ஏற்பட்ட பாதிப்பின் போது செய்த வேலைகளையும் எடுத்து கூறி அவர் வாக்கு சேகரித்தார்.
அனைத்து பகுதிகளுக்கும் சாலை வசதி, கால்வாய் வசதி, மின்விளக்கு வசதி என அனைத்து அடிப்படை பணிகளையும் செய்து கொடுப்பேன்.
அரசின் சார்பில் திருமண உதவி முதியோர் உதவி என அனைத்து திட்டங்களையும் நம் பகுதிக்கு முழுமையாக கொண்டு வந்து சேர்ப்பதற்கு நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு எப்போதும் வருவதாகவும், உள்ளாட்சி தேர்தலில் கை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.