விளாத்திகுளம் பேரூராட்சி தேர்தலில் 3வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சரண்யா ஸ்ரீதரை ஆதரித்து மார்கண்டேயன் எம்எல்ஏ தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வேட்பாளர்களின் பிரச்சாரம் அனல் பறக்க தொடங்கியுள்ளது. விளாத்திகுளம் தொகுதி அதிமுக கோட்டைத்தான் என்று நிரூபிக்க விளாத்திகுளம் பேரூராட்சியை கைபற்றும் முனைப்பில் அதிமுக வினர் தேர்தல் களத்தில் சூழல, தொகுதியை தன் வசம் வைத்திருக்கும் திமுகவோ, விளாத்திகுளம் பேரூராட்சியை விட்டு விடக்கூடாது என வேகம் காட்ட, விளாத்திகுளம் பேரூராட்சி தேர்தல் களம் அனல் பறக்கிறது.
இதனிடையே, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மற்றும் திமுகவின் சமூக வலைதள பிரச்சார பீரங்கியாக செயல்பட்டும் வரும் ஸ்ரீதர் என்பவரின் மனைவியும், இளம் பட்டாதாரி பெண்ணுமான திமுக வேட்பாளர் சரண்யாவை ஆதரித்து, விளாத்திகுளம் பேரூராட்சி 3 வது வார்டில் பிரச்சாரம் மேற்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன், வீடு வீடாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருடன் கட்சி நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் உடன் இருந்தனர்.