சுயேட்சை வேட்பாளர்களை நம்பி ஏமாந்துவிடாதீர்கள். அரசுடன் இணைந்து பணியாற்றும் வேட்பாளர்களை தேர்ந்தெடுங்கள் என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் ரெக்ஸின், ரிக்டா, மும்தாஜ், கலைச்செல்வி, சுரேஷ்குமார், ராமுத்தம்மாள், சரண்யா, ஆகியோரை ஆதரித்து பல்வேறு பகுதிகளில் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் திறந்த வெளி பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில்:
சுயேட்சையாக உங்கள் பகுதியில் நிற்கும் வேட்பாளர்களை நம்பாதீர்கள் அவர்களுக்கு வாக்களித்து வாக்கை வீணடித்துவிடாதீர்கள். முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் தான் கனிமொழி எம்.பி, மற்றும் என்னோடு இணைந்து பணியாற்றி தமிழக அரசின் அனைத்து திட்டங்களையும் உங்கள் பகுதிக்கு கொண்டு வந்து சேர்க்க முடியும்.
கடந்த காலத்தில் கொரோனா மற்றும் மழைக்காலங்களில் எல்லா பகுதிகளிலும் உழைத்தவர்கள்தான் வேட்பாளர்களாக உள்ளனர். கடந்த 5 வருடமாக உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இருந்து அதிமுக ஓட்டு கேட்பதற்கு வெட்கம் இல்லயா? என கேள்வியெழுப்பிய அவர் மக்களுக்கான பணிகளை செய்வதற்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளாட்சி தேர்தலை அறிவித்து உங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க வழிவகை செய்துள்ளார்.
மாநகரில் மின்விளக்கு புதிதாக அமைப்பதற்கு 4 கோடி திட்டம் தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 7.5 விழுக்காடு மூலம் தமிழில் படிப்போர் அனைவருக்கும் அனைத்து பட்டப்படிப்புகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது.
அரசின் தீவிர முயற்சியால் தடுப்பூசி செலுத்தப்பட்டு கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. முதலமைச்சரின் கரத்தை வலுப்படுத்த திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.
பிரச்சாரத்தில், காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் சண்முகம், திமுக மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மதிமுக மாநில மீனவரணி செயலாளர் நக்கீரன், திமுக பொதுக்குழு உறுப்பினரும் வேட்பாளருமான ஜெகன் பெரியசாமி, மாவட்ட மீனவரணி செயலாளர் அந்தோணி ஸ்டாலின், துணைச்செயலாளர் ஜேசையா, அரசு வக்கீல் சுபேந்திரன், மாநகர தொண்டரணி செயலாளர் முருகஇசக்கி, மீனவரணி துணைச்செயலாளர் ஆர்தர்மச்சாது, வட்டச்செயலாளர்கள் டென்சிங், மீனாட்சி சுந்தரம், கங்காராஜேஷ், மாவட்ட பிரதிநிதிகள் கதிரேசன், அன்டன்பொன்சேகா, சக்திவேல், ராஜ்குமார், தொழிற்சங்க செயலாளர் மரியதாஸ், இலக்கிய அணி துணைச்செயலாளர் ஆவுடையப்பன், மதிமுக அவைத்தலைவர் தொம்மை இலக்கிய அணி நிர்வாகிகள் மகாராஜன், விநாயகமூர்த்தி, காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன், வார்த்தக அணி தலைவர் வக்கீல் டேவிட் பிரபாகரன், இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் மாவட்ட தலைவர் மீராசா, பகுதி இளைஞர் அணி செயலாளர் சூர்யா, நிர்வாகிகள் கீதா செல்வமாரியப்பன், நாகூர், தினகரன், அப்பர்ஜான், சிபிஎம் கிளைச்செயலாளர் அழுகுபாண்டி, முன்னாள் கவுன்சிலர்கள் செந்தில்குமார், ராதாகிருஷ்ணன், கந்தசாமி, காங்கிரஸ் மண்டல தலைவர்கள் ஐசன்சில்வா, மதிமுக வடக்கு மாவட்ட துணைச்செயலாளர்கள் வீரபாண்டி செல்லச்சாமி, ஒன்றிய செயலாளர் சரவணன், தொழிற்சங்க செயலாளர் அனல்செல்வராஜ், உள்பட கூட்டணி கட்சியை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.