• vilasalnews@gmail.com

தூத்துக்குடி 39வது வார்டு திமுக வேட்பாளர் சுரேஷ்குமாரை உற்சாகமாக வரவேற்ற பொதுமக்கள்

  • Share on

தூத்துக்குடி 39வது வார்டு திமுக வேட்பாளர் சுரேஷ்குமாரை உற்சாகமாக பொதுமக்கள் வரவேற்றனர்.

நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. திமுக வேட்பாளராக 39வது வார்டில் சுரேஷ்குமார் போட்டியிடுகிறார்.

இவர் பகுதியான ரெங்கநாதபுரம் கிழக்கு மேலரதவீதி, வடக்குரதவீதி தொடர்ச்சி, பத்திரகாளியம்மன் கோவில் தெரு, ராஜாபிள்ளை லேன், வரதராஜபுரம் வடக்கு சம்மந்தமூர்த்தி தெரு, கிழக்கு ரதவீதி, பெருமாள் கோவில் தெரு, தெப்பக்குளம் தெரு, சிவன்கோவில் தெரு, உள்ளிட்ட வார்டுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த பல வருடங்களாக பொது மக்களுக்கு தேவையான பல்வேறு பொது பணிகளை செய்து வருகிறார்.

அது மட்டுமின்றி, ஜாதி, மத பேதமின்றி அனைத்து நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு மனிதநேயத்தை வளர்த்து மக்களோடு மக்களாக வாழ்ந்து வரும் இவர், குடித்தண்ணீர், சாலை வசதி, கால்வாய் வசதி, மின்விளக்கு போன்ற குறைபாடுகளை தெரிவிக்கும் மக்களுக்கு அரசு  அதிகாரிகளை தொடர்பு கொண்டும், நேரில் சந்தித்தும் அக்குறைகளை தீர்த்து முழுமையாக தன்னை அர்பணித்து கொண்டு பணியாற்றி வருகிறார்.

இவர் ஏற்கனவே மாநகராட்சியில் 3 முறை மாமன்ற உறுப்பினராக மட்டுமில்லாமல் அப்பகுதி மக்களின் குடும்பத்தில் சக உறுப்பினராகவும் இருப்பதால் இவர் வாக்கு சேகரிக்க போகும் இடமெல்லாம் மக்கள் இவரை உற்சாகமாக வரவேற்று உன் வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் என வாழ்த்தி வருகின்றனர்.

  • Share on

தூத்துக்குடி 39வது வார்டு திமுக வேட்பாளர் சுரேஷ்குமார் உதயசூரியன் சின்னத்திற்கு வீதிவீதியாக சென்று வாக்கு சேகரிப்பு!

சுயேட்சைகளை வேட்பாளர்களை நம்பி ஏமாந்துவிடாதீர்கள்... அரசுடன் இணைந்து பணியாற்றும் வேட்பாளர்களை தேர்ந்தெடுங்கள் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

  • Share on