• vilasalnews@gmail.com

தூத்துக்குடி 39வது வார்டு திமுக வேட்பாளர் சுரேஷ்குமார் உதயசூரியன் சின்னத்திற்கு வீதிவீதியாக சென்று வாக்கு சேகரிப்பு!

  • Share on

தூத்துக்குடி 39வது வார்டு திமுக வேட்பாளர் சுரேஷ்குமார் உதயசூரியன் சின்னத்திற்கு வீதிவீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.

நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. திமுக வேட்பாளராக 39வது வார்டில் சுரேஷ்குமார் போட்டியிடுகிறார்.

இவர் பகுதியான ரெங்கநாதபுரம் கிழக்கு மேலரதவீதி, வடக்குரதவீதி தொடர்ச்சி, பத்திரகாளியம்மன் கோவில் தெரு, ராஜாபிள்ளை லேன், வரதராஜபுரம் வடக்கு சம்மந்தமூர்த்தி தெரு, கிழக்கு ரதவீதி, பெருமாள் கோவில் தெரு, தெப்பக்குளம் தெரு, சிவன்கோவில் தெரு, உள்ளிட்ட வார்டுக்குட்பட்ட பகுதிகளுக்கு கடந்த பல வருடங்களாக பொதுமக்களுக்கு தேவையான சாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், முதியோர் உதவி தொகை, திருமண உதவித்தொகை, புதிய ரேசன் கார்டு, பெயர் சேர்த்தல், நீக்கல் என பல்வேறு பொது பணிகளை பகுதி மக்களுக்காக செய்து கொண்டு வருகிறார்.

அது மட்டுமின்றி கோவில் திருவிழா, ஆலய விழா, மசூதி விழா என அனைத்து தரப்பினரும் நடத்தும் நிகழ்ச்சிகளில் ஜாதி, மத, பேதமின்றி முடிந்தவரை அனைத்து உதவிகளையும் செய்து அதில் கலந்து கொண்டு மனிதநேயத்தை வளர்த்து மக்களோடு மக்களாக வாழ்ந்து வருபவர் பகுதிக்குட்பட்ட பகுதிகளில் குடித்தண்ணீர், சாலை வசதி, கால்வாய் வசதி, மின்விளக்கு போன்ற குறைபாடுகளை தெரிவிக்கும் மக்களுக்கு அரசு ஊழியர்கள், அதிகாரிகள் வரை தொடர்பு கொண்டு நேரில் சந்தித்து அந்த குறைகளை தீர்ப்பதற்கும், பகுதி மக்களின் மேம்பாட்டிற்காக தன்னையே முழுமையாக அர்பணித்து கொண்டு பணியாற்றி வருகிறார்.

இவர் ஏற்கனவே மாநகராட்சியில் 3 முறை மாமன்ற உறுப்பினராக பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அனைவரையும் அரவணைத்து செல்லும் குணமுடைய இவர் பகுதிக்குட்பட்ட பகுதியில் அலுவலகம் அமைத்து மக்கள் பணியாற்றுவது மட்டுமின்றி தான் இல்லாத நேரங்களில் தனது அலுவலகப் பணியாளர்கள் மூலம் மக்களின் குறைகளையும் கேட்டறிந்து தீர்த்து வைக்கும் குணமுடையவர்.

எல்லோரும் எளிதில் சந்திக்கக்கூடியவர். அரசியலிலும் வாழ்க்கையை தொடங்கி பணியாற்றி வருகிறார்.

சுரேஷ்குமார் பொது மக்களிடம் கூறுகையில், என்னை உதயசூரியன் சின்னத்தில் தேர்ந்தெடுத்து வெற்றி பெற செய்தால் தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள வார்டுகளில் முதன்மை வார்டாக மாற்றுவேன்.

உங்களுக்கு பணி செய்வதற்கு ஊழியனாக களத்தில் போட்டியிடுகிறேன். தேர்தல் நேரத்தில் மற்றவர்கள் கொடுக்கும் வாக்குறுதிகள் மறைந்து போகும். நான் சொல்லும் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். கொரோனா காலக்கட்டத்தில் பகுதி மக்களுக்கு செய்த உதவிகளையும், நன்மைகளையும் எண்ணிப்பார்த்து எளியவனாகிய எனக்கு இனிமையாக பழகும் உங்கள் வீட்டு வேலைக்காரனாக பணியாற்றுவதற்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.

உங்களுக்காக உழைப்பேன். உண்மையாக இருப்பேன் என்று அனைத்து பகுதிகளிலும் வாக்கு சேகரித்து வரும் சுரேஷ்குமார் வாக்களரிடம் வாக்குறுதி அளித்து ஓட்டு கேட்டு வருகிறார்.

  • Share on

அதிமுக வேட்பாளர் சேவியரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் வாக்கு சேகரிப்பு!

தூத்துக்குடி 39வது வார்டு திமுக வேட்பாளர் சுரேஷ்குமாரை உற்சாகமாக வரவேற்ற பொதுமக்கள்

  • Share on