• vilasalnews@gmail.com

அதிமுக வேட்பாளர் சேவியரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் வாக்கு சேகரிப்பு!

  • Share on

அதிமுக வேட்பாளர் சேவியரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் வாக்கு சேகரித்தார்.

நடைபெறவுள்ள உள்ளாட்சி மன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் துணை மேயரும்,  பகுதி செயலாளருமான சேவியரை ஆதரரித்து முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்பு செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன் வாக்களர்களிடம் வீதிவீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் கூறுகையில், அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகளை என்னிப்பார்க்க வேண்டும். குரூஸ்பர்னாந்து பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று  அறிவித்தது அம்மாவின் ஆட்சி காலத்தில்

மீனவர்கள் நலன் மட்டுமின்றி அனைவருடைய நலமும் அக்கறையுள்ள கட்சி அதிமுக, எளிமையான வேட்பாளரை தேர்ந்தெடுத்து ஆடம்பரம் இல்லாத அரசியலுக்கு வழிவகை செய்ய வேண்டும்.

உங்களுக்காக உழைத்திட சேவியருக்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

பிரச்சாரத்தில், பகுதி செயலாளர் முருகன், தலைமை பேச்சாளர் கருணாநிதி, ஜெ பேரவை மூர்த்;தி, மாவட்ட பிரதிநிதி சேவியர் ராஜ், வட்ட செயலாளர் சுயம்பு, மீனவரணி பகுதி செயலாளர் வினோத், வட்டப்பிரதிநிதிகள் லூர்து ராஜன், சுரேஷ், நிர்வாகிகள் உத்திரஜெயம், கணபதி, முருகையா, ஜேசுராஜன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடியில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் கீதாஜீவன் பிரச்சாரம்

தூத்துக்குடி 39வது வார்டு திமுக வேட்பாளர் சுரேஷ்குமார் உதயசூரியன் சின்னத்திற்கு வீதிவீதியாக சென்று வாக்கு சேகரிப்பு!

  • Share on