• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் கீதாஜீவன் பிரச்சாரம்

  • Share on

தூத்துக்குடியில் திமுக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் கீதாஜீவன் வாக்கு  சேகரித்தார்.

நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் வைதேகி, ராஜேந்திரன், ராமகிருஷ்ணன், காங்கிரஸ் வேட்பாளர் எலிசபெத்ராஜன், கம்யூனிஸ்ட் வேட்பாளர் முத்துமாரி, ஆகியோர்களை அறிமுகப்படுத்தி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வெளி வாகனம் மூலம் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில்,  தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் 1லட்சம் கோடி மதீப்பில் புதிய தொழிற்சாலை ஓப்பந்தங்கள் முதலீடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதன் மூலம் வேலை வாய்ப்புகள் கிடைக்கும் வேலையற்றோர் பயன்பெறுவார்கள் தமிழகத்தில் வேலைவாய்ப்பு தமிழர்களுக்கு மட்டும் தான் என்ற சட்டத்தின் மூலம் சாதனை படைத்துள்ளார் முதல்வர். ஆட்சியில் இருக்கும் போது எத்தனை திட்டங்கள் சாதனைகள் நடைபெற்றுள்ளது. என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த பணி தொடர்வதற்கு உள்ளாட்சியில் பொதுமக்கள் அனைவரும் மதசார்பற்ற கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து நல்ல நிர்வாகம் அமைந்திட மாநகராட்சி மேயரை திமுக கைப்பற்ற வேண்டும். அதற்கு உங்கள் பகுதியில் போட்டியிடும் மாமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற வேண்டும்.

10 ஆண்டுகளுக்கு முன்பு நான் செய்த பணிகளுக்கு பின்பு அதிமுக ஆட்சியில் எந்த பணியும் நடைபெறவில்லை. விட்ட பணிகளையும் தொட்ட பணிகளையும் தொடர்ந்து செய்திட அனைவரும் வாக்களிக்க வேண்டும் மாநகர பகுதியில் கால்வாய் இல்லாத இடங்களுக்கு கழிவுநீர் எடுப்பதற்கு எம்.பி நிதி எம்.எல்ஏ நிதியிலிருந்து தலா 2 கழிவுநீர் எடுக்கும் லாரியை வாங்கப்பட்டுள்ளது.

விரைவில், பயன்பாட்டிற்கு வரும் திமுக தேர்தல் வாக்குறுதியில் கொடுத்தது மட்டுமின்றி பல்வேறு நல்ல திட்டங்களை செய்துள்ளனர். குறிப்பாக கொரோன உதவித்தொகை 4ஆயிரம் பால் விலை 3 குறைப்பு, பெட்ரோல் விலை 3 குறிப்பு என பல நடந்துள்ளன. தொடர்ந்து இதுபோன்று பல பணிகள் நடைபெறுவதற்கு திமுக வெற்றி பெற வேண்டும் குழப்பத்தை ஏற்படுத்தி குட்டையில் மீன்பிடிக்க நினைப்பவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்.

எந்த சலசலப்புக்கும் திமுக அஞ்சாது எப்போதும் போல் என்னை நீங்கள் எந்த குறைகளாகவும் இருந்தாலும் தொடர்பு கொண்டு பேசலாம் என்றார்.

பிரச்சாரத்தில், மாநில காங்கிரஸ் துணைத்தலைவர் சண்முகம், திமுக பொதுக்குழு உறுப்பினர் ஜெகன்பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் ராஜா, மாநில மதிமுக மீனவரணி செயலாளர் நக்கீரன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் முரளிதரன், மாநகர மதிமுக செயலாளர் முருகபூபதி, திமுக வட்டச்செயலாளர்கள் சாரதி, முக்கையா,  சுரேஷ், நவநீதன், வட்டப்பிரதிநிதிகள் சுப்பையா, புதுராஜா, இசக்கி, செந்தமிழ்செல்வன், பாபு, ராம்மோகன், முத்துக்குமார், துணைச்செயலாளர்கள் பண்டாரசாமி நயினார், சப்பாணிமுத்து, பொருளாளர் மாடசாமி, இளைஞர் அணி செயலாளர் கணேஷ்குமார், துணைச்செயலாளர் ரகுபதி, ஆனந்தகுமார், குமார், ஜேசுபாலன், செல்வேந்திரன், மகேஸ்வரசிங், வக்கீல் அணி ரூபராஜா, மாநகர மருத்துவ அணி செயலாளர் அருண்குமார், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் முத்து, மாவட்ட மதிமுக இளைஞர் அணி துணைச்செயலாளர் சரவணபெருமாள், சிபிஐ சேர்ந்த பலவேசம், பல்வேறு அணியை சேர்ந்த நிர்வாகிகள் பிரசன்னா, செந்தில்குமார், உள்பட கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பிரச்சாரத்தின் போது கார்கில் போரில் உயிரிழந்த அருணாசலம் நினைவு ஸ்துபியில் உள்ள அவரது படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி அமைச்சர் கீதாஜீவன் மரியாதை செலுத்தினார்.

  • Share on

தூத்துக்குடி 14வது வார்டு சுயேட்சை வேட்பாளர் கீதாமுருகேசன் தீவிர வாக்கு சேகரிப்பு

அதிமுக வேட்பாளர் சேவியரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் வாக்கு சேகரிப்பு!

  • Share on