• vilasalnews@gmail.com

தூத்துக்குடி 14வது வார்டு சுயேட்சை வேட்பாளர் கீதாமுருகேசன் தீவிர வாக்கு சேகரிப்பு

  • Share on

தூத்துக்குடி 14வது வார்டு சுயேட்சை வேட்பாளர் கீதாமுருகேசன் தென்னை மரம் சின்னத்திற்கு வீதிவீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.

நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. மாநகராட்சி பகுதியில் பல்வேறு அரசியல் கட்சியை சார்ந்தவர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாநகராட்சி 14வது வார்டில் சுயேட்சை வேட்பாளராக கீதாமுருகேசன் போட்டியிடுகிறார்.

14வது வார்டு பகுதிகளான விஎம்எஸ் நகர், பாரதிநகர், சின்னக்கண்ணுபுரம், செல்வநாயகபுரம், அன்னை இந்திராநகர், தேவர் காலனி, நேதாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில்  தென்னை மரம் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரித்து வருகிறார்.

இவர் ஏற்கனவே தூத்துக்குடி மாமன்ற உறுப்பினராக பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.  தன்னை தென்னை மரம் சின்னத்தில் தேர்ந்தெடுத்து வெற்றி பெற செய்தால் தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள வார்டுகளில் முதன்மை வார்டாக மாற்றுவேன். உங்களுக்கு பணி செய்வதற்கு ஊழியனாக களத்தில் போட்டியிடுகிறேன். தேர்தல் நேரத்தில் மற்றவர்கள் கொடுக்கும் வாக்குறுதிகள் மறைந்து போகும். நான் சொல்லும் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். கொரோனா காலக்கட்டத்தில் பகுதி மக்களுக்கு செய்த உதவிகளையும், நன்மைகளையும் எண்ணிப்பார்த்து எளியவனாகிய எனக்கு இனிமையாக பழகும் உங்கள் வீட்டு வேலைக்காரனாக பணியாற்றுவதற்கு தென்னை மரம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். உங்களுக்காக உழைப்பேன். உண்மையாக இருப்பேன் என்று கூறி கீதா முருகேசன் அனைத்து பகுதிகளிலும் வாக்கு சேகரித்து வருகிறார்.

  • Share on

தூத்துக்குடி 12வது வார்டு திமுக வேட்பாளர் தெய்வேந்திரன் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பு

தூத்துக்குடியில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் கீதாஜீவன் பிரச்சாரம்

  • Share on