தூத்துக்குடி 12வது வார்டு திமுக வேட்பாளர் தெய்வேந்திரன் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி 12வது வார்டு திமுக வேட்பாளராக போட்டியிடும் தெய்வேந்திரன் ஸ்டேட் பேங் காலணியில் உள்ள சுந்தரமூர்த்தி விநாயகர் கோவில் முன்பு ஊர்வலமாக சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
அப்போது திமுக ஆட்சியின் சாதனைகளையும் அமைச்சர் கீதாஜீவன் செய்த பணிகளையும் எடுத்துக்கூறி, மழைகாலங்களில் ஏற்பட்ட பாதிப்பின் போது செய்த வேலைகளையும் கருத்தில் கொண்டு தமிழக அரசின் அனைத்து திட்டங்களும் இப்பகுதிக்கு முழுமையாக கிடைப்பதற்கு உழைப்பேன். அனைத்து பகுதிகளுக்கும் சாலை வசதி கால்வாய் வசதி மின்விளக்கு வசதி என அனைத்து அடிப்படை பணிகளையும் செய்து கொடுப்பேன்.
அரசின் சார்பில் திருமண உதவி, முதியோர் உதவி என அனைத்து திட்டங்களையும் நம் பகுதிக்கு முழுமையாக கொண்டு வந்து சேர்ப்பதற்கு நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு எப்போதும் வருவேன் எனவே தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றிபெற செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
பிரச்சாரத்தின் போது மாநகர இளைஞர் அணி துணைச்செயலாளர் அருண்சுந்தர், வட்ட செயலாளர் நாராயணன், வட்டப்பிரதிநிதிகள் ராஜன், முருகன், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர்கள் சிவக்குமார், துணை அமைப்பாளர்கள் சந்தனமாரிமுத்து, சேர்மதுரை, முனீஸ்வரன், வார்டு நிர்வாகிகள் பேச்சிமுத்து, ரமேஷ், சமத்துவமணி, கிருஷ்ணன், முருகன், ஜெயபாலகணபதி, மகளிர் அணி முத்துலட்சுமி, சரோஜா, தங்கலட்சுமி, பரிமளா, ரமணி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.