தூத்துக்குடி 60வது வார்டு லேபர் காலணியில் திமுக வேட்பாளர் வக்கீல் பாலகுருசாமி வாக்கு சேகரித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி 60வது வார்டு திமுக வேட்பாளர் வக்கீல் பாலகுருசாமி லேபர் காலணியில் உள்ள சந்தனமாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.
அப்போது அவருக்கு அப்பகுதி மக்கள் ஆரத்தி எடுத்து சால்வை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர்.
இந்த பிரச்சாரத்தின் போது, மாவட்ட பொறியாளர் அணி செயலாளர் அன்பழகன், மாநகர ஆதிதிராவிட நல அணி துணைச்செயலாளர் பால்ராஜ், உள்பட திமுக நிர்வாகிகள் கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.