• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் மாற்று கட்சியினர் திமுகவில் ஐக்கியம்

  • Share on

தூத்துக்குடியில் அதிமுக, தேமுதிக, ரஜினி ரசிகர் மன்றம் உள்ளிட்ட மாற்று கட்சியினர் அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.


தூத்துக்குடி டூவிபுரம் பகுதியை சேர்ந்த தேமுதிக மாவட்ட மாணவரணி செயலாளர் ஷேக்உமர், ஜவஹர், சுந்தர், ராஜ் அதிமுகவை சேர்ந்த ரவிக்குமார், முத்துச்செல்வம், நாகராஜர், தீபக், அமமுகவை சேர்ந்த அன்னராஜன், அஸ்வின், சரவணன், ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த கணேசன், சுந்தர், பிரபா, பார்த்திபன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் எட்டையபுரம் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அரங்கில் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

இந்நிகழ்ச்சியில், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட துணைச்செயலாளர் ஆறுமுகம், மாவட்ட மாணவரணி துணைச்செயலாளர் வக்கீல் சீனிவாசன், மாநகர வக்கீல் அணி செயலாளர் ராஜேந்திரன், மாநகர பொறியாளர் அணி துணைச்செயலாளர் உலகநாதன், பகுதி செயலாளர் ரவீந்திரன், வட்டச்செயலாளர் முக்கையா, பகுதி இளைஞர் அணி செயலாளர் ரவி, உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

  • Share on

தூத்துக்குடி 60வது வார்டு பகுதி திமுக வேட்பாளர் தேவாலயதிற்கு வெளியே வாக்கு சேகரிப்பு

தூத்துக்குடி 60வது வார்டு லேபர் காலணியில் திமுக வேட்பாளர் வக்கீல் பாலகுருசாமி தீவிர வாக்கு சேகரிப்பு

  • Share on