தூத்துக்குடி 60வது வார்டு பகுதியில் உள்ள கிறிஸ்துவ தேவாலயதிற்கு வெளியே தி.மு.க வேட்பாளர் வக்கீல் பாலகுருசாமி வாக்கு சேகரித்தார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க பகுதிக்குட்பட்ட மாநகராட்சி பகுதி 60வது வார்டு பகுதியில் அனல்மின் நகர், துறைமுகம் குடியிருப்பு, சுனாமி குடியிருப்பு, கோயில்பிள்ளை நகர், துறைமுகம் நெடுஞ்சாலை ஆகிய பகுதிகள் அடங்கிய வார்டில் அனைத்து தரப்பினரும் குடியிருந்து வருகின்றனர்.
இன்று காலை (13.02.2022) துறைமுக நெடுஞ்சாலை பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு வந்தவர்களிடம் வாக்கு சேகரித்தார்.