• vilasalnews@gmail.com

தூத்துக்குடி திமுக வேட்பாளர்கள் பெரியசாமி நினைவிடத்தில் அஞ்சலி!

  • Share on

தூத்துக்குடி திமுக வேட்பாளர்கள் பெரியசாமி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள்.தூந

நடைபெறவுள்ள உள்ளாட்சி மன்ற தேர்தலில் மாநகராட்சி பகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் வழிகாட்டுதலின்படி வார்டுக்குட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

அவர்களுக்கு அமைச்சர் கீதாஜீவனும் திமுக ஆட்சியில் சாதனைகளையும் அதிமுக ஆட்சியில் நடைபெற்ற வேதனைகளையும் குறைகளையும் சுட்டிக்காட்டி வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்நிலையில், மறைந்த முன்னாள் மாவட்ட திமுக செயலாளர் என்.பெரியசாமியின் நினைவிடம் போல்பேட்டையில் உள்ளது. நினைவிடத்தில் பகுதி செயலாளரும் திமுக வேட்பாளருமான சுரேஷ்குமார் மலர் அஞ்சலி செலுத்தி வணங்கி பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார். மாவட்ட பிரதிநிதி சக்திவேல், சண்முகபுரம் பகுதி இளைஞர் அணி செயலாளர் சூர்யா, உள்பட பலர் மரியாதை செலுத்தினார்கள்.

  • Share on

தூத்துக்குடி திமுக வேட்பாளர்களை ஆதரித்து தெருமுனை பிரச்சாரம்

தூத்துக்குடி 60வது வார்டு பகுதி திமுக வேட்பாளர் தேவாலயதிற்கு வெளியே வாக்கு சேகரிப்பு

  • Share on