• vilasalnews@gmail.com

தூத்துக்குடி 44வது அதிமுக வேட்பாளரை ஆதரித்து எஸ்.பி. சண்முகநாதன் பிரச்சாரம்

  • Share on

தூத்துக்குடி பிரையன்ட்நகர் அதிமுக வேட்பாளர் சுதேசி பிரபாகரை ஆதரித்து எஸ்.பி. சண்முகநாதன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

    தூத்துக்குடி பிரையன்ட்நகர் பகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து எஸ்.பி.சண்முகநாதன் பிரச்சாரம் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலையொட்டி 44வது வார்டில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் சுதேசி பிரபாகரை ஆதரித்து முன்னாள் அமைச்சரும் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான எஸ்.பி. சண்முகநாதன் அறிமுகப்படுத்தி பேசுகையில் இந்த பகுதி முழுமையாக வளர்ச்சியடைய அதிமுக வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும். திமுக தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றவில்லை. அதிமுக ஆட்சியில் மக்கள் நிம்மதியாக வாழ்ந்தனர். திமுக ஆட்சியில் படும் இன்னல்கள் ஏராளம் இந்த நிலைமை மாற வேண்டும். உங்கள் வீட்டு சகோதரியாக போட்;டியிடும் சுதேசி பிரபாகருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெற செய்ய வேண்டும் என்று பிரச்சாரத்தின் போது வாக்களர்களிடம் கேட்டுக்கொண்டார்.

பிரச்சாரத்தில் அமைப்பு செயலாளர் சின்னத்துரை, வக்கீல் அணி செயலாளர் சேகர், சிறுபான்மை அணி செயலாளர் பிரபாகர், முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ், முன்னாள் நகர்மன்ற தலைவர் ஹென்றி, எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் ரமேஷ்கிருஷ்ணன், வட்டச்செயலாளர் பிரபாகர், வட்டப்பிரதிநிதிகள் சமுத்திரம், அல்பட், மாணிக்கராஜ், வசந்தா, மற்றும் பேச்சியம்மாள், இளைஞர் அணிதுணைச்செயலாளர் வக்கீல் மகாராஜா, இளைஞர் இளம் பெண்கள் பாசறை ஆனந்த், பரமசிவம், கிருஷ்ணமூர்த்தி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடி 14வது வார்டு தேமுதிக வேட்பாளர் சண்முகம் நேதாஜி நகரில் தீவிர வாக்கு சேகரிப்பு

தூத்துக்குடி திமுக வேட்பாளர்களை ஆதரித்து தெருமுனை பிரச்சாரம்

  • Share on