தூத்துக்குடி 14வது வார்டு தேமுதிக வேட்பாளர் சண்முகம் நேதாஜி நகரில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி பகுதி 14வது வார்டு தேமுதிக வேட்பாளராக போட்டியிடும் M. சண்முகம் அன்னை இந்திரா நகர், தேவர்காலனி, முத்தமாள்காலனி, குறிஞ்சிநகர், நேதாஜி நகர், ஆகிய பகுதிகளில் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் SSS.U சந்திரன் தலைமையில் முரசு சின்னத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பொதுமக்களிடம் கூறுகையில், 10 ஆண்டுகளாக மக்களின் குறைகளை தீர்க்காத கட்சிகளுக்கு மிகச்சரியான பாடம் புகட்ட வேண்டும். பகுதியில் உள்ள அனைத்து குறைகளையும் தீர்ப்பதற்கும் என்னை தேர்ந்தெடுக்க வேண்டும். கூப்பிட்ட குரலுக்கு எப்போதும் வந்து எல்லா நன்மைகளையும் உங்களுக்கு கிடைப்பதற்கு முழுமையாக என்னை அற்பணித்து கொண்டு பணியாற்றுவேன் என்றார்.
இதில் மாவட்ட பொருளாளர் விஜயன், 1ம்பகுதி கழக தலைவர் தாயப்பன், பகுதி துணை செயலாளர் சின்னதுரை, 1ம்பகுதி கழக வட்ட செயலாளர்கள் மாரிகனி, பிரகாஷ், சுரேஷ், பகுதி செயலாளர்கள் நாராயணமுர்த்தி, சம்சூதீன், மாணவரணி செல்வம் மற்றும் பகுதி மகளிர் அணியினர் கழக தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்.