தூத்துக்குடி 20வது வார்டு திமுக வேட்பாளர் ஜெகன் பெரியசாமி கோமதிபாய் காலணியில் வாக்கு சேகரித்தார்.
நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி பகுதி 20வது வார்டு திமுககூட்டணி வேட்பாளராக போட்டியிடும் திமுக பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி கோமதிபாய் காலணி, பழைய ஸ்டேட்பேங்க் காலணி, உள்ளிட்ட பல பகுதிகளில் நடந்தே சென்று பொதுமக்கள் வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்தார்.
பொதுமக்களிடம் கூறுகையில், 10 ஆண்டுகளாக மக்களின் குறைகளை தீர்க்காத அதிமுக அரசுக்கு மிகச்சரியான பாடம் புகட்ட வேண்டும். பகுதியில் உள்ள அனைத்து குறைகளையும் தீர்ப்பதற்கும் அரசின் திட்டங்கள் முறையாக உங்களுக்கு கிடைத்திடவும் என்னை தேர்ந்தெடுக்க வேண்டும். கூப்பிட்ட குரலுக்கு எப்போதும் வந்து எல்லா நன்மைகளையும் உங்களுக்கு கிடைப்பதற்கு முழுமையாக என்னை அற்பணித்து கொண்டு முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலோடு பணியாற்றுவேன் என்றார்.
பிரச்சாரத்தில், வட்டசெயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான ரவீந்திரன், முன்னாள் கவுன்சிலர்கள் முத்துச்செல்வம், கிங்ஸ்டன், வட்டச்செயலாளர் நாராயணன், மாநகர வர்த்தக அணி துணைசெயலாளர் பாலமுருகன், மாவட்ட தொண்டரணி துணைச்செயலாளர் ராமர், மாவட்ட விவசாய அணி துணைச்செயலாளர் தங்கராஜ், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகரன், லிங்கராஜா, வட்டப்பிரதிநிதி மந்திரம், சமூக ஆர்வலர் ஐசக், நிர்வாகிகள் அற்புதராஜ், அருணகிரி, ராஜா, கடற்கரை, கனகசுந்தர், குமார், கீதா செல்வமாரியப்பன், ராம்குமார், சண்முகசுந்தரம், முத்துக்குமார், ஜேஸ்பர், ஞானமார்ட்டின், பாஸ்கர், கணேஷ், ராஜா, பெரியசாமி, கதிரேசன், மின்வாரிய தொழிற்சங்க செயலாளர் பேச்சிமுத்து, அவைத்தலைவர் செந்தூர்பாண்டி, குமார், ஸ்டாலின், சேகர் உள்;பட பலர் கலந்து கொண்டனர்.