தூத்துக்குடி 60வது வார்டு பகுதியை முன்மாதிரி வார்டாக மாற்றப்படும் என தி.மு.க வேட்பாளர் பாலகுருசாமி மக்களிடம் பிரச்சாரம்
தூத்துக்குடி மாநகராட்சி 60வது வார்டுக்கு உட்பட்ட பகுதியான அனல்மின் நகர், துறைமுகம் குடியிருப்பு, சுனாமி குடியிருப்பு, கோயில்பிள்ளை நகர், துறைமுகம் நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் திமுகவ சார்பில் போட்டியிடும் பாலகுருசாமி பொதுமக்களிடையே தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
60வது வார்டில் போட்டியிடும் தான் வெற்றிபெற்றால், வார்டுக்குட்பட்ட பகுதிகளிலுள்ள சாலை, கால்வாய், மின்விளக்கு போன்ற குறைகளை முழுமையாக தீர்த்து வைப்பது மட்டுமின்றி அரசின் அனைத்து திட்டங்களையும் பகுதி மக்களுக்கு கிடைப்பதற்கு முழுமையாக பாடுபடுவேன்.
மேலும், 60வது வார்டு பகுதியை தூத்துக்குடி மாநகராட்சியின் முன்மாதிரி வார்டாக மாற்றுவேன் என திமுக வேட்பாளர் பாலகுருசாமி உறுதிபட கூறி தனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.