நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தூத்துக்குடி மாநகராட்சியில் 28-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு பாஜக சார்பில் சொர்ணபிரியா என்பவர் போட்டியிடுகிறார். அவர் தான் வெற்றி பெற்று தூத்துக்குடி மாநகராட்சியில் 28-வது வார்டு கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டால் கீழ்காணும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக வார்டு மக்களுக்கு தெரிவித்துள்ளார்.
- சுத்தமான குடிநீர் தாராளமாக அனைத்து வீடுகளுக்கும் கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்படும்.
- சுகாதாரமான கான் வசதி செய்து அதை தினமும் தூய்மைப் பணியாளர்கள் சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
- குப்பைகளை காலை மாலை இரு வேளைகளில் தூய்மைப் பணியாளர்களால் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
- பழுதடைந்த சாலைகளை முழுமையாக அகற்றி விட்டு புதிய தரமான சாலைகளை பழைய உயரத்திற்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு கருதி குற்ற சம்பவங்களை தடுக்க சிசிடிவி பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
- மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைத்து மத்திய அரசின் கடன் உதவித் திட்டங்கள் பெற்றுத்தரப்படும்.
- இளைஞர், இளம் பெண்களுக்கு சுயதொழில் புரிய மத்திய அரசின் கடன் உதவித் திட்டங்களை பெற்றுத்தரப்படும்.
- நமது வார்டு பகுதிகளில் பொது போக்குவரத்து இடைஞ்சல் இல்லாத வகையில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கவும், மக்களுக்கு தேவையான மரக்கன்றுகள் வழங்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
- சாலைகளில் வாகனங்கள் வேகமாக செல்வதை கட்டுப்படுத்த தடுப்புகள் அமைத்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- வார்டு மக்கள் இல்லங்களில் நடைபெறும் பெண்கள் திருமணத்திற்கு அரசின் உதவி பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் .
- குடிதண்ணீர் வரும் நேரம் மற்றும் மின்தடை போன்ற பல தகவல்கள் டிஜிட்டல் முறையில் உடனடியாக மக்களுக்கு தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.