தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 10 ஆண்டுகளாக பட்டா வழங்காத அதிமுகவிற்கு பாடம் புகட்ட வேண்டும் என அமைச்சர் கீதாஜீவன் தேர்தல் பிரச்சாரத்தில் வேண்டுகோள்
நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்லையொட்டி மாநகராட்சியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் இசக்கிராஜா, கண்ணன் பொன்னப்பன், ராமர், ஜான் கந்தசாமி, கனகராஜ், அதிஷ்டமணி, காங்கிரஸ் வேட்பாளர் சந்திரபோஸ் ஆகியோரை ஆதரித்து வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
பின்னர் பொது மக்களிடம் பேசுகையில், கொரோனா மற்றும் மழைக்காலங்களில் இப்பகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளவர்கள் மக்கள் பணியாற்றியவர்கள் இந்த பகுதியில் குடியிருக்கும் பலருக்கு 2011ல் திமுக ஆட்சியில் பட்டா வழங்கப்பட்டது. அதற்கு பின் வந்த அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளாக பட்டா கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு வழங்கப்படாமல் உள்ளது. அதை மீண்டும் முதல்வர் ஸ்டாலினிடம் எடுத்துச்சொல்லி அரசாணை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஆசிரியர் காலணி உட்பட்ட சில பகுதிகளில் 10 ஆண்டுகாலமாக சாலை வசதிகள் செய்யாமல் இருப்பதை தேர்தல் முடிந்ததும் அப்பணிகள் மேற்கொள்ளப்படும். திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் என்னவென்று பட்டியலிட்டால் அதிமுக ஆட்சியில் சாதனை என்னவென்று தெரியவரும் அந்த அளவிற்கு முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின் செய்துள்ளார்.
சொன்னதைத்தான் செய்வோம் செய்வதைத்தான் சொல்வோம் தேர்தல் நேரத்தில் ஜாதி மதத்தை சொல்லி குட்டையை கிளப்பி மீன்பிடிக்க வருவார்கள் அதற்கு நீங்கள் இடம் கொடுக்காமல் நமக்காக உழைக்கின்ற வேட்பாளர்களை கனிமொழி எம்.பி மற்றும் என்னுடன் இணைந்து பணியாற்றுபவர்களை தேர்ந்தெடுத்து நல்ல மாநகராட்சி நிர்வாகம் அமைவதற்கு வாக்களிக்க வேண்டும். மாநகராட்சி பகுதிகளில் வளர்ச்சி பணிகளுக்கென 187 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான பணிகள் நடைபெறவுள்ளது என்றார். மாநில காங்கிரஸ் துணைத்தலைவர் சண்முகம் உள்பட பலர் பிரச்சாரம் செய்தார்கள்.
பிரச்சாரத்தில், மாவட்ட சுற்றுச்சூழல் அணி செயலாளர் ஜெபசிங், மாநகர மாணவரணி துணைச்செயலாளர் பால்மாரி, பகுதி துணைச்செயலாளர் பாலு, வட்டச்செயலாளர்கள் நாராயணன், மந்திரமூர்த்தி, பொன்னுச்சாமி, வட்டப்பிரதிநிதிகள் வன்னியராஜ், பாஸ்கர்இ குமார், சுபாஷ், மணிகண்டன், பால்ராஜ், சௌந்தரபாண்டியன், செல்வக்குமார், மனோஜ், கிளிப்ராஜன், புஷ்பாநகர் பகுதிநலச்சங்க தலைவர் ரமணி, முன்னாள் கவுன்சிலர் செந்தில்குமார், மற்றும் அல்பட், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் முத்து உள்பட கூட்டணி கட்சியை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.