• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் பா.ஜ.க வேட்பாளர் உறுதிமொழி பத்திரம் கொடுத்து வீடு வீடாக வாக்கு சேகரிப்பு!

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் 39-வது வார்டு பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் உஷாதேவி புதுமையான முறையில் வீடுவீடாக உறுதிமொழி பத்திரம் கொடுத்து வாக்குகளை சேகரிப்பது விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது. 

தூத்துக்குடி மாநகராட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெறுகிறது. இதில் 60 வார்டுகளிலும் போட்டியிடும் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தேர்தல் பிரச்சாரத்தில் இருப்பதால் தேர்தல் களம் களைகட்டி உள்ளது. இதனால் தூத்துக்குடி நகரம் முழுவதும் எங்கு பார்த்தாலும் கட்சி கொடிகளுடன் வேட்பாளர்கள் நடந்து  சென்று வீடு வீடாக ஓட்டு சேகரித்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், தூத்துக்குடி 39வது வார்டில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் எஸ். உஷாதேவி சண்முகசுந்தரம் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார். இதற்கிடையே அவர் தமிழ்நாட்டிலேயே எந்த வேட்பாளரும் செய்யாததை அவர் செய்துள்ளார். தனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அனைத்து மக்களிடமும் வீடு வீடாக சென்று 20 ரூபாய் பத்திரத்தில் ஒரு உறுதிமொழி வழங்கியுள்ளார்.

அந்தப் பத்திரத்தில் அவர் கூறியதாவது:

தூத்துக்குடி மாநகராட்சி 39 வது வார்டில் போட்டியிடும் ஒரே பெண் வேட்பாளர் ஆகிய நான் பாரதிய ஜனதா கட்சி சார்பில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறேன். மேலும், என் மீது எந்த குற்ற வழக்கும் நிலுவையில் இல்லை என்பதை பெருமையுடன் கூறிக் கொள்கிறேன்

நான் கவுன்சிலரான பிறகு ரேஷன் கடைகளில் அனைவருக்கும் அனைத்து பொருட்களும் உரிய முறையில் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்வேன். மக்கள் யாரிடமும் கமிஷன் பெற மாட்டேன். அதோடு தங்கள் வீட்டில் நடைபெறும் கட்டுமான வேலைகள் சம்பந்தமாகவோ கழிவுநீர் குடிநீர் சம்பந்தமாகவோ எந்த வேலை வந்தாலும் பணம் பெற மாட்டேன். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் எந்த கட்டப் பஞ்சாயத்துகளிலும் தேவையில்லாத ஆடம்பரமும் செய்ய மாட்டேன். பொதுமக்களை ஏமாற்றி பணம் பெற மாட்டேன் என்னை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம். அனைத்து அரசாங்க சேவைகளும் இலவசமாக செய்து கொடுத்தேன் என்பதை இதன் மூலம் உறுதி கூறுகிறேன். இவ்வாறு அந்த பத்திரத்தில் கூறியுள்ளார்.

இந்நிகழ்ச்சியில், பாரதிய ஜனதா கட்சி மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் சண்முகசுந்தரம் மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ஆர். கனகராஜ் கிழக்கு மண்டல பொதுச்செயலாளர் சௌந்தரராஜன்,  ஊடக பிரிவு மாவட்ட செயலாளர் விஜயன், ஊடகப் பிரிவு மாவட்ட தலைவர் விக்னேஷ் பிள்ளை மற்றும் கணேசன் ஆகியோர் உடன் சென்றனர்.

பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் உஷாதேவி வீடு வீடாக கொடுத்திருக்கும் அந்தப் பத்திரம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது.

  • Share on

திருநங்கைகளுக்கு முன்மாதிரி விருது: ஆட்சியர் அறிவிப்பு!

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 10 ஆண்டுகளாக பட்டா வழங்காத அதிமுகவிற்கு பாடம் புகட்ட வேண்டும்- அமைச்சர் கீதாஜீவன் வேண்டுகோள்

  • Share on