• vilasalnews@gmail.com

திருநங்கைகளுக்கு முன்மாதிரி விருது: ஆட்சியர் அறிவிப்பு!

  • Share on

திருநங்கைளுக்கான முன்மாதிரி விருது பெற தகுதியான திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் "2021-2022-ஆம் நிதியாண்டில் திருநங்கைளுக்கான முன்மாதிரி விருது திருநங்கையர் தினமான ஏப்ரல் 15-ம் தேதி வழங்கப்படஉள்ளது. இவ்விருது பெறுவோர் கீழக்காணும் தகுதிகளை பெற்றிருப்பின் awards.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் 01.02.2022 முதல் 28.02.2022 வரைவிண்ணப்பம் செய்யலாம்

1. திருநங்கைகள் அரசு உதவி பெறாமல் தானாக சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருத்தல் வேண்டும்.

2. குறைந்ததது 5 திருநங்கைகளுக்காவது அவர்கள் வாழ்க்கையில் முன்னேற உதவியிருக்க வேண்டும்.

3. திருநங்கைகள் நலவாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது.

குறிப்பு: இணையதளத்தில் விண்ணப்பம் செய்வோர் புத்தக வடிவ கருத்துரு ஒன்றினை மாவட்ட சமூகநல அலுவலத்தில் சமர்ப்பிக்குமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

கையேட்டில் இணைக்கப்படவேண்டியவை:

1. சுயசரிதை

2. தனியரைப் பற்றிய விவரம்(ஒருபக்கஅளவில் - Soft & Hard Copy)

3. விருதுகளின் விவரம்(விருதுபெற்றிருப்பின் அதன் விவரம் / விருதின் பெயர்/ யாரிடமிருந்து பெற்றது மற்றும் பெற்ற வருடம்)

4. சேவை பற்றிய செயல்முறை விளக்கம்(புகைப்படத்துடன்)

5. சேவையைப் பாராட்டி பத்திரிக்கை செய்திக்குறிப்பு

6. சேவையாற்றியதற்கான விரிவான அறிக்கை

7. சமூக பணியாளர் இருப்பிடத்தின் அருகில் உள்ளகாவல் நிலையிலிருந்து பெறப்பட்ட குற்றவியல் நடவடிக்கைகள் ஏதுமில்லை என்பதற்கான சான்று

8. சமூக சேவையாளரின் / சமூக சேவை நிறுவனத்தின் சேவை மூலமாக பயனடைந்த விவரம் 

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

  • Share on

கடம்பூர் முதல்நிலை பேரூராட்சிக்கு 19ஆம் தேதி பொது விடுமுறை பொருந்தாது - மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

தூத்துக்குடியில் பா.ஜ.க வேட்பாளர் உறுதிமொழி பத்திரம் கொடுத்து வீடு வீடாக வாக்கு சேகரிப்பு!

  • Share on