கடம்பூர் முதல் நிலை பேரூராட்சிக்கு வருகிற 19ம் தேதி பொது விடுமுறை பொருந்தாது என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் :
அனைத்து மாவட்டங்களுக்கும் உட்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. தேர்தல் நடைபெற உள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளுக்கும் 19ஆம் தேதி பொது விடுமுறை அளிக்க உரிய ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்(தேர்தல்) துறை, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளுக்கும் 19ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் முதல்நிலை பேரூராட்சியில் தேர்தல் மாநில தேர்தல் ஆணையத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது. அப்பகுதிக்கு இந்த பொது விடுமுறை பொருந்தாது என தெரிவிக்கப்படுகிளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.