தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்து அதன் வெற்றியை முதல்வர் ஸ்டாலினிடம் சமர்பிக்க வேண்டும் என 23வது வார்டில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் தனலட்சுமி 23வது வார்டில் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து திமுக வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில்:
மக்களுக்காகவும் நாட்டின் வளர்ச்சிக்காகவும் உழைக்கின்ற இயக்கத்தை சேர்ந்த வேட்பாளர்களை நாம் நிறுத்தியுள்ளோம் இப்பகுதியில் கடந்த காலத்தில் பெய்த மழையால் ஏற்பட்ட பாதிப்பை விட திமுக ஆட்சி அமைந்த பின்பு முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டதால் பாதிப்பு சற்று குறைவாக இருந்தது. இனி வரும் காலங்களில் அதுபோன்ற நிலை வராது இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவருக்கும் மழைகாலம் மட்டுமின்றி பொதுமக்களுக்காக நல்ல முறையில் பணியாற்றி வருகின்றார்.
அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் இருந்ததை மக்களுக்கான திட்டங்கள் செயல்பாடுகள் முழுமையாக உள்ளாட்சி பிரதிநிதிகள் மூலம் சென்றடைய வேண்டும் என்று கருதி முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளாட்சி தேர்தலை அறிவித்துள்ளார். ஆளும் கட்சிக்கு இணக்கமான உறுப்பினர் தேர்வு செய்யப்படுவதின் மூலம் நிர்வாகமும் நல்ல முறையில் நடைபெறும் மக்களுக்கும் நன்மைகள் கிடைக்கும் 60 வார்டுகளிலும் வெற்றி பெற்று முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பிக்க வேண்டும் அதற்கு அனைவரும் ஓற்றுமையாக உழைக்க வேண்டும். கதிர்அருவாள் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றார்.
இந்த பிரச்சாரத்திற்கு திமுக வட்ட செயலாளர் சேகர் தலைமை வகித்தார். திமுக பிரதிநிதிகள் அனந்தப்பன், சங்கர், ராமகிருஷ்ணன், சீதாராமன், காங்கிரஸ் வார்டு தலைவர் மகாலிங்கம், பெட்டின், விமோலியன், அந்தோணி, டைசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், காங்கிரஸ் கட்சி மாநில துணைத்தலைவர் சண்முகம், திமுக பொதுக்குழு உறுப்பினரும் வேட்பாளருமான ஜெகன் பெரியசாமி, திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் ஞானசேகர், துணை செயலாளர் மாடசாமி, பொருளாளர் சுப்பிரமணியன், மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன், மண்டலத்தலைவர் ஐசன்சில்வா, ஐஎன்டியுசி தொழிறசங்க தலைவர் ராஜு, அனைத்திந்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் வக்கீல் சந்தனசேகர், திமுக பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், சுரேஷ்குமார், மாநகர வர்த்தக அணி துணைச்செயலாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ், பகுதி இளைஞர் அணி செயலாளர் சூர்யா, போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர், முன்னாள் கவுன்சிலர் செந்தில்குமார், உள்பட கூட்டணி கட்சியை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.