தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகமான பழைய மாநகராட்சி அலுவலகத்தில் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் பெயர் சின்னம் பொருத்தும் பணி அரசியல் கட்சியினர் முன்பாக இன்று காலை நடைபெறுகிறது.
தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் ஓட்டுப்பதிவு இயந்திரம் வார்டு வாரியாக எந்த வார்டுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்பது குறித்த ரேண்டமேஷன் நேற்று நடந்தது.
இதனையடுத்து, மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகமான பழைய மாநகராட்சி அலுவலகத்தில் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் பெயர் சின்னம் பொருத்தும் பணி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்பாக இன்று காலை நடைபெறுகிறது.
இந்த பணிகள் முடிந்தவுடன் பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்படும். 24 மணி நேரமும் அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.