• vilasalnews@gmail.com

நரிக்குறவர் மக்களிடம் வாக்கு சேகரித்த தூத்துக்குடி 20வது வார்டு வேட்பாளர் ஜெகன் பெரியசாமி

  • Share on

தூத்துக்குடி 20வது வார்டு திமுக வேட்பாளர் ஜெகன் பெரியசாமி நரிகுறவர்  மக்களிடம் வாக்கு சேகரித்தார். 

நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி 20வது வார்டு பகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜெகன் பெரியசாமி புதிய பேருந்துநிலையம் பகுதியில் உள்ள நரிக்குறவர்கள் குடும்பத்தினரிடம் வாக்கு சேகரித்தார்.

அப்போது நரிக்குறவ மக்கள் பாசி மாலை அணிவித்து வரவேற்று அவர்களது கோரிக்கையை வேட்பாளரிடம் தெரிவித்தனர்.

பின்னர், வேட்பாளர் ஜெகன் பெரியசாமி கூறுகையில், தமிழகத்தில் நடப்பது திமுக ஆட்சி சொல்வதை தான் செய்வோம், செய்வதைதான் சொல்வோம் என்ற கொள்கையோடு வாழ்ந்து வரும் முதலமைச்சர் முக.ஸ்டாலின் ஏழை எளிய நடுத்தர என அனைத்து தரப்பினர்களின் நிலைமைகளை நன்கு அறிந்தவர்.

அவரது ஆட்சியில் இல்லை என்ற பதில் வராது. எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க வேண்டும் என்ற என்னத்தோடு பணியாற்றும் முதல்வரை பெற்றுள்ள தமிழ்நாட்டில் உங்களை போன்ற நரிக்குறவர்களின் கோரிக்கைகளை கடந்த 8மாத கால ஆட்சியில் பல்வேறு மாவட்டங்களில் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. அதே போல் இங்கு குடியிருக்கும் உங்களது கோரிக்கையும் தேர்தல் முடிந்த பின் நிச்சயமாக செய்து கொடுக்கப்படும்.

அதற்கு அனைவரும் திமுக ஆட்சிக்கு துணையாக இருக்கும் வகையில் எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

உடன், மாவட்ட தொண்டரணி துணைச்செயலாளர் ராமர், தலைமை பொதுக்குழு உறுப்பினர் சி.எஸ்.ராஜா, மின்வாரிய தொழிற்சங்க செயலாளர் பேச்சிமுத்து, வட்டச்செயலாளர் ரவீந்திரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர், நிர்வாகிகள் அருணகிரி, ஸ்டாலின், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடி வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் பெயர் சின்னம் பொருத்தும் பணி - அரசியல் கட்சியினர் முன்பாக நடைபெறுகிறது!

  • Share on