• vilasalnews@gmail.com

தூத்துக்குடி வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட வாக்கு எண்ணும் மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாநகராட்சிக்கு நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையமான வ.உ.சி. பொறியியல் கல்லூரியில் ஏற்படுத்தப்படவுள்ள அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்,  இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சிதேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

ஏற்கனவே ஒவ்வொரு வார்டுகளுக்கும் வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் பணிகள் முடிந்து வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

இந்ததேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெல் நிறுவன பொறியாளர்களால் பரிசோதனை செய்யப்பட்டு தேர்தல் ஆணைய இணைதளத்தில் ஏற்றப்பட்டு முதல் கட்டமாக பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டாவது கட்டமாக 8ம் தேதி தேர்தல் பார்வையாளர், அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் நடைபெற்றுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் 6 இடங்களில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அந்த இடங்களில் தேர்தல் இருக்காது.

இரண்டாம் கட்டபணிகள் முடிக்கப்பட்டு இன்று 3ம் கட்டமாக தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு ஒதுக்கீடு நடைபெறுகிறது. வாக்குப்பதிவு மையங்களில் கழிப்பிடவசதிகள், அடிப்படை வசதிகள் போர்க்கால அடிப்படையில் செய்து வருகிறார்கள்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி, 3 நகராட்சிகள் கோவில்பட்டி, திருச்செந்தூர், காயல்பட்டிணம் அதுமட்டுமல்லாமல் 17 பேரூராட்சிகளிலும் வாக்குஎண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சியில் வ.உ.சி. பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் அமைக்கப்பட்டுள்ள வழிகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் அவர்களால் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. வேட்பாளர்கள், பொதுமக்கள், பத்திரிகையாளர்கள் வருவதற்கு தேவையான வசதிகள் செய்து வாக்கு எண்ணிக்கை நடத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.

ஆய்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்தேர்தல் நடத்தும் அலுவலர் / மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ, வருவாய் கோட்டாட்சியர் சிவசுப்பிரமணியன், மாநகராட்சி நிர்வாக பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா, உதவி பொறியாளர் சரவணன், கல்லூரி முதல்வர், அலுவலர்கள் உடனிருந்தனர்

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது, புகையிலை விற்பனை : 15 பேர் கைது

நரிக்குறவர் மக்களிடம் வாக்கு சேகரித்த தூத்துக்குடி 20வது வார்டு வேட்பாளர் ஜெகன் பெரியசாமி

  • Share on