ஆழ்வார்திருநகரி அருகே வழிப்பறிப்பில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் உத்தரவுபடி, ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேசன் மேற்பார்வையில் ஆழ்வார்திருநகரி காவல் நிலைய ஆய்வாளர் மணிவண்ணன் தலைமையில் உதவி ஆய்வாளர் செல்வன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது தென்திருப்பேரை அருகே சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் தென்திருப்பேரையைச் சேர்ந்த பிச்சை மகன் முருகப்பெருமாள் (33) என்பதும், அவர் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரிடம் பணப் பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இதுகுறித்து ஆழ்வார்திருநகரி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.